மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

Written By:

மாருதி சுஸுகி கார் நிறுவனத்தின் ஷோரூம்கள் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி தனது வர்த்தகத்தை தக்க வைக்கவும், உயர்த்திக் கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பட்ஜெட் கார் தயாரிப்பாளர் என்ற பிம்பத்தை மாற்றும் விதத்தில், சில ஆண்டுகளுக்கு முன் தனது விலை உயர்ந்த மாடல்களுக்காக நெக்ஸா என்ற பெயரில் பிரிமியம் கார் ஷோரூம்களை திறந்தது.

மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

இந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக தற்போது இருக்கும் நெக்ஸா அல்லாத தனது சாதாரண கார் ஷோரூம்களையும் மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய ஷோரூம்கள் மாருதி சுஸுகி அரேனா என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

Recommended Video
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

இளம் தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகள், சிறந்த கட்டமைப்பு வசதிகளுடன் மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது.

மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

கார் வாங்குவோரில் 75 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக கார் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு ஷோரூம்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு ஏதுவான விதத்தில் மாருதி அரேனோ கார் ஷோரூம்கள் அமைக்கப்படும்.

மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

முதல் கட்டமாக வரும் மார்ச் மாதத்திற்குள் 80 மாருதி கார் ஷோரூம்கள், மாருதி சுஸுகி அரேனா கார் ஷோரூம்களாக மேம்படுத்தப்பட்டுவிடும் என்று மாருதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிச்சி அயுகவா தெரிவித்துள்ளார்.

மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாருதி கார் ஷோரூம்களும் நவீன அம்சங்களுடன் மாருதி அரேனோ ஷோரூம்களாக மேம்படுத்தப்படும். இந்த ஷோரூம்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கார் வாங்கும் அனுபவத்தை வழங்கும் என்று கெனிச்சி அயுகவா கூறி இருக்கிறார்.

மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

தற்போது நாடு முழுவதும் மாருதி கார் நிறுவனத்திற்கு 2050 கார் ஷோரூம்கள் இருக்கின்றன. இவை தற்போது மேம்படுத்தப்பட உள்ளன.

மாருதி கார் ஷோரூம்கள் மேம்படுத்தப்படுகிறது!

அண்மையில், நெக்ஸா கார் ஷோரூம்களில் சர்வீஸ் வசதியை மாருதி கார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, தனது ட்ரூ வேல்யூ என்ற பழைய கார் விற்பனை மையங்களையும் மேம்படுத்தப்பட இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Maruti Suzuki to revamp of its car showrooms.
Story first published: Thursday, August 31, 2017, 9:29 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos