புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

Written By:

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டிருக்கும் புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

போட்டியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்கும் விதத்தில், மாருதி எஸ் க்ராஸ் காருக்கு வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய தொழில்நுட்ப அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி எஸ் க்ராஸ் காரானது, சிக்மா, டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். புதிய மாருதி எஸ் க்ராஸ் காரின் முகப்பு க்ரில் அமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி எஸ் க்ராஸ் காரின் உட்புறத்தில் மென்மையான பிளாட்டிக் பயன்படுத்தப்பட்டிருக்கும் டேஷ்போர்டு புதிது. பியானோ பிளாக் என்ற பளபளக்கும் கருப்பு வண்ண சென்டர் கன்சோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும்.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி சியாஸ், எர்டிகா உள்ளிட்ட கார்கள் போன்றே, சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது புதிய மாருதி எஸ் க்ராஸ் கார். சிக்னல் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நின்றிருந்தால், எஞ்சின் தானாக அணைந்துவிடும். க்ளட்ச் பெடலை மிதித்தால் மீண்டும் எஞ்சின் இயங்கும்.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

அத்துடன், இந்த கார் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மூலமாக பிரேக் பிடிக்கும்போதும், ஆக்சிலரேட்டரை குறைக்கும்போதும் விரயமாகும் ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படும்.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மேடான சாலையில் ஏறும்போதும், ஓவர்டேக் செய்யும்போது கூடுதலாக தேவைப்படும் டார்க் திறன் பேட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும மின் ஆற்றல் மூலமாக ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் கூடுதல் திறனை வழங்கும். டார்க் அசிஸ்ட் மூலமாக எளிதாக ஓவர்டேக் செய்வதற்கும், மேடான சாலையில் ஏறுவதும் மிக எளிதாகும்.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக வெகுவாக எரிபொருள் சேமிப்பு பெறும் வாய்ப்பு ஏற்படும். மேலும், ஏற்கனவே விற்பனையில் இருந்த 1.6 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் மாடலில் இனி மாருதி எஸ் க்ராஸ் கார் கிடைக்காது.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

மாருதி எஸ் க்ராஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எஞ்சின் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதிகளும் உயர் வேரியண்ட்டில் கிடைக்கிறது. ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராவும் உள்ளது.

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் நெக்ஸா புளூ, பியர்ல் ஆல்டிக் ஒயிட், கஃபேயின் பிரவுன் மற்றும் பிரிமியம் சில்வர் மற்றும் கிரானைட் க்ரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

எக்ஸ்ஷோரூம் விலை

எக்ஸ்ஷோரூம் விலை

சிக்மா: ரூ.8,49 லட்சம்

டெல்ட்டா: ரூ.9.39 லட்சம்

ஸீட்டா: ரூ.9.98 லட்சம்

ஆல்ஃபா: ரூ.11.29 லட்சம்

English summary
Maruti Suzuki S-Cross Facelift Launched In India.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark