2017 மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

2017 மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது..!!

By Azhagar

மாருதி சுசுகி நிறுவனம் தயாரித்துள்ள புதிய எஸ்- கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான டெஸ்ட் டிரைவிங் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதனால் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இந்திய ஆட்டோமொபைல் துறையில் எழுந்துள்ளது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

மாருதி சுசுகியின் பிளாக்‌ஷிப் கார், நெக்சா விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

தற்போது இதே மாடல் தான் இந்த புதிய மாடல் கார் இந்தியாவில் அறிமுகமாகி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்-கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எஸ்.யூ.வி-க்கான அனைத்து கட்டமைப்புகளையும் கொண்டு இருக்கும்.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

ஜிஎஸ்டி வரி முறையால், இந்தியாவில் எஸ்.யூ.வி-க்கான விலை குறைந்துள்ளது. இதனால் புதிய மாருதி சுசுகி ஃபேஸ்லிஃப்ட் எஸ்-கிராஸ் காரின் விற்பனை இந்தியாவில் அதிகரிக்கும் என்பது இங்குள்ள துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

ஐரோப்பா நாடுகளில் தற்போது விற்பனையில் உள்ள மாடலை போன்று தான் இந்தியாவிலும் இந்த கார் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

புதிய மாருதி சுசுகி ஃபேஸ்லிஃப்ட் எஸ்-கிராஸ் மாடல் எஸ்.யூ.வி-க்கான திறன் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் தனித்துவம் ஈர்க்கிறது.

கிரில் எல்.இ.டி புரொஜக்டெர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் கூட இயங்கும் இண்டகிரேட்டெட் எல்.இ.டி விளக்குகள் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

முன்னர் இருந்த மாடலை விட இந்த புதிய மாடலில் பம்ப்பர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்குகள் அதற்கு திருத்தமான தோற்றத்தை தருகிறது.

16 அங்குல அலாய் வீல்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன. காரின் பின்புறத்தில் எல்.இ.டி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

மாருதி சுசுகி விற்பனை செய்து வரும் எஸ்-கிராஸ் மாடல் இரண்டு டீசல் எஞ்சின் தேவைகளில் சிக்மா, டெல்டா, செடா மற்றும் ஆல்ஃபா என நான்கு ட்ரிம் வீல்களை கொண்டுள்ளது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

மற்றொரு டீசல் எஞ்சினை பெற்ற மாடல் இதில் டாப்-என்ட் ஆல்ஃபா ட்ரிம் தேவைகளில் உள்ளது. இதற்கான வரவேற்பு அதிகமுள்ள நிலையில் இதே தேவைகள் வரக்கூடிய புதிய எஸ்-கிராஸ் மாடலிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

காரின் உள்கட்டமைப்பில் 7 அங்குல ஸ்மார்ட் பிளே கொண்ட தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ என இரண்டு தேவைகளையும் ஏற்றுக்கொள்ளும்.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

பாதுகாப்பு தேவைகளில் ஏபிஎஸ், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பார்க்கிங் சென்ஸார் மற்றும் குழந்தை இருக்கைகளுக்கான மவுன்ட்கள் வழங்கப்பட்டுள்ளது

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

தற்போதைய டீசலில் இயங்கும் புதிய எஸ்-கிராஸ் கார் மாடல்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதில் செயல்படும் என்ஜின் தான் இதிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

இரண்டு மாடல்களில் உள்ள ஒரு டீசல் மாடல் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் எஞ்சினைக்கொண்டுள்ளது. இது 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வழங்கும். இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

மேலும் மற்றொரு டாப்-வேரியண்ட் மாடல் 1.6 லிட்டர் டிடிஐஎஸ் 320 எஞ்சின் பெற்றுள்ளது. இது 118 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வழங்கும் வல்லமை கொண்டது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

இந்த டாப் வேரியண்ட் மாடலுக்கான எஞ்சினில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.

விரைவில் வெளிவரும் மேம்படுத்த மாருதி சுசுகி எஸ்-கிராஸ் கார்!

தற்போது விற்பனையில் உள்ள எஸ்-கிராஸ், மாடலுக்கு தகுந்தவாறு ரூ. 8.38 லட்சத்தில் துவங்கி ரூ.12.43 லட்சம் வரை விலை பெறுகிறது.

புதிய மேம்படுத்தப்பட்ட மாடல் காருக்கு ரூ.8.5 லட்சம் தொடங்கி ரூ.13 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIA Carwale

Most Read Articles
English summary
Read in Tamil- Maruthi Suzuki S Cross Facelift Spied in India. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X