கூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்!

Written By:

மாருதி ஸ்விஃப்ட் காரின் குறைவான விலை வேரியண்ட்டாக எல்எக்ஸ்ஐ பெட்ரோல் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வேரியண்ட்டில் கூடுதல் அடிப்படை வசதிகளை சேர்த்து ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் என்ற பெயரில் பிரத்யேக மாடலை மாருதி கார் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.

கூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்!

இந்த நிலையில், இந்த ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் மாடலில் தற்போது ஏர்பேக் கூடுதல் பாதுகாப்பு வசதியாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை மாருதி நிறுவனம் செய்தித்தாள்களில் விளம்பரம் மூலமாக தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, மிகச் சிறப்பான வசதிகளுடன் மிக குறைவான விலை ஸ்விஃப்ட் வேரியண்ட்டாக மாறி இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்!

மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் வேரியண்ட்டில் யுஎஸ்பி போர்ட், ஸ்பீக்கர்கள், புளூடூத் போன்ற வசதிகள் கொண்ட மியூசிக் சிஸ்டம், அனைத்து கதவுகளுக்கும் பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் வசதி, கருப்பு வண்ண பில்லர்கள் போன்றவை இடம்பெற்று இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்!

இந்த காரில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 84.3 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. இந்த கார் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்!

ஏர்பேக் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் புதிய மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன் காருக்கு ரூ.4.80 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் அம்சங்களும், குறைவான விலையும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

கூடுதல் பாதுகாப்புடன் வந்த மாருதி ஸ்விஃப்ட் டிஎல்எக்ஸ் எடிசன்- விபரம்!

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனவே, வரும் மாதங்களில் தற்போதைய மாடலின் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. விற்பனையை அதிகரிக்க இதுபோன்று கூடுதல் அம்சங்கள் கொண்ட ஸ்பெஷல் எடிசன் ஸ்விஃப்ட் கார் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Via- IAB

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

English summary
Maruti Suzuki has launched the Swift DLX trim with the driver side airbag with a price tag of Rs 4.8 lakh ex-showroom (Delhi).

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark