பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

சக்திவாய்ந்த புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாருதி சியாஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

சியாஸ், எர்டிகா உள்ளிட்ட கார்களில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் திறன் போதவில்லை என்ற விமர்சனங்கள் வாடிக்கையாளர் மத்தியிலும், பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் உண்டு. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் மாருதி இறங்கி உள்ளது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

ஆம். மாருதி சியாஸ் காரில் அதிக திறன் வாய்ந்த டீசல் எஞ்சினை பொருத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாருதி சியாஸ் கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

மாருதி சியாஸ் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் சியாஸ் காருக்கு பொருத்தமானதாக இல்லை என்று கிடைத்த பின்னூட்டங்களின் அடிப்படையில் மாருதி தற்போது புதிய டீசல் எஞ்சினுடன் சியாஸ் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

தற்போது பயன்படுத்தப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. ஆனால், புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மிகச் சிறந்த செயல்திறனுடன் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

மாருதி சியாஸ் காரில் பொருத்தப்பட இருக்கும் புதிய 1.5 டீசல் எஞ்சினின் செயல்திறன் பற்றி விபரங்கள் இதுவரை இல்லை. இந்த புதிய டீசல் எஞ்சினை சுஸுகி நிறுவனம் சொந்தமாக உருவாக்கி உள்ளது. இதுதவிர, புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினையும் சுஸுகி நிறுவனம் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

அடுத்த ஆண்டு இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாருதி சியாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலின் விலையும் சற்று அதிகம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

மாருதி டீசல் கார்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீசல் எஞ்சின் இந்தியர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. மைலேஜ், நீடித்த உழைப்பு, குறைவான பராமரிப்பு போன்றவை இந்த எஞ்சினுக்கு இந்தியர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை பெற்றிருக்கின்றன.

பவர்ஃபுல் டீசல் எஞ்சினுடன் களமிறங்குகிறது மாருதி சியாஸ் கார்!

எனினும், ஃபியட் நிறுவனத்துக்கு வழங்கப்படும் ராயல்டி தொகையை கட்டுப்படுத்தும் விதத்திலும், மாருதி சியாஸ் காரை போட்டியாளர்களுக்கு சரிநிகர் மாடலாக நிலைநிறுத்தவும் இந்த புதிய டீசல் எஞ்சினை சுஸுகி உருவாக்கி உள்ளது.

Most Read Articles
English summary
India's leading passenger vehicle manufacturer, Maruti Suzuki has completed the tests of the Ciaz with a new diesel engine.
Story first published: Tuesday, July 4, 2017, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X