மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு போட்டியான ரகத்தில் புதிய எஸ்யூவி மாடலை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டாடா ஹெக்ஸா கார்களுக்கு நேர் போட்டியை தரும் புதிய எஸ்யூவி மாடலை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் மாருதி நிறுவனம், மெல்ல மெல்ல விலை அதிகம் உள்ள மார்க்கெட்டை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக, எஸ்யூவி மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

ஏற்கனவே, எஸ் க்ராஸ் என்ற க்ராஸ்ஓவர் மாடலையும், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மாடலையும் களமிறக்கியது. இதில், மாருதி பிரெஸ்ஸா விற்பனையில் கலக்கி வருகிறது. எனவே, இப்போது ருசி கண்ட பூனையாக, எஸ்யூவி மார்க்கெட்டில் அடுத்து ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்ய மாருதி முடிவு செய்துள்ளதாக எக்கானமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Recommended Video

[Tamil] 2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India - DriveSpark
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டாடா ஹெக்ஸா கார்களுக்கு இணையான ரகத்தில் இந்த புதிய எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் 2019ம் ஆண்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா இந்த தகவலை எக்கானமிக் டைம்ஸ் தளத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புதிய எஸ்யூவி அறிமுகத்திற்கான கால அளவை குறிப்பிட்டு கூற முடியாது. ஆனால், 2019ம் ஆண்டின் இறுதியில் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

இந்த புதிய மாடல் 7 சீட்டர் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ் க்ராஸ் காருக்கு அதிக விலை நிர்ணயித்து சூடுபட்டுக் கொண்ட மாருதி வழக்கம்போல், போட்டியாளர்களுக்கு சவால் தரும் விலையில் இந்த புதிய மாடலை களமிறக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

எனவே, விலையிலும், சிறப்பம்சங்களிலும் மாருதியின் புதிய எஸ்்யூவி மாடல், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டாடா ஹெக்ஸா கார்களுக்கு கடும் நெருக்கடியை தரும் என்று நம்பலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி தவிர்த்து,ஒய்எச்பி என்ற குறியீட்டுப் பெயரில் புதிய க்ராஸ்ஓவர் மாடலையும் தயாரித்து வருகிறது. இந்த புதிய க்ராஸ்ஓவர் கார் எர்டிகா காரின் அடிப்படையிலான பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேர் போட்டியாக வரும் புதிய மாருதி எஸ்யூவி!

மேலும், விற்பனையில் கலக்கி வரும் மாருதி வேகன்- ஆர் காரின் 7 சீட்டர் மாடலையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, யுட்டிலிட்ட ரக கார் சந்தையில் மிக வலுவான சந்தையை ஏற்படுத்திக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 26, 2017, 12:12 [IST]
English summary
Maruti Suzuki To Launch Premium SUV In India — Will It Rival The Mahindra XUV500 & Tata Hexa?
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+