விற்பனையில் டாப் 10 கார்கள்... 8 இடங்களை கைப்பற்றிய மாருதி!

கடந்த மாத விற்பனையில் டாப் 10 பட்டியலில் 8 மாருதி கார்கள் இடம்பிடித்துள்ளன. அதன் விபரங்களை காணலாம்.

By Saravana Rajan

கடந்த மாதம் கார் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப்-10 கார் மாடல்களின் விபரத்தை இந்திய கார் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டு இருக்கிறது.

இதில் வேடிக்கையான விஷயம், இந்த பட்டியலில் 8 இடங்களை மாருதி கார் நிறுவனத்தின் கார் மாடல்களே கைப்பற்றி உள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களையும் ஹூண்டாய் கார் மாடல்கள் கைப்பற்றி வி்டடன. வேறு எந்தவொரு கார் நிறுவனத்துக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இப்போது பட்டியலை காணலாம்.

10. மாருதி ஓம்னி

10. மாருதி ஓம்னி

கடந்த மாதம் விற்பனையில் டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தை மாருதி ஓம்னி வேன் பிடித்தது. கடந்த மாதத்தில் 8,723 ஓம்னி வேன்கள் விற்பனையாகி உள்ளன. மிக நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்தாலும், பன்முக பயன்பாட்டுக்கு ஏற்ற பட்ஜெட் விலை மாடலாக இருப்பதால் மாருதி ஓம்னி காரின் விற்பனை தொடர்ந்து நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

 09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

ஜனவரியில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 8,932 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. சரியான விலையில் கிடைப்பதுடன் மாருதி நிறுவனத்தின் மிகச் சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் இந்த எஸ்யூவிக்கு வலு சேர்க்கிறது. மைலேஜிலும் சிறப்பாக இருக்கிறது.

 08. மாருதி பலேனோ

08. மாருதி பலேனோ

கடந்த மாதத்தில் 10,476 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகி உள்ளன. அசத்தலான டிசைன், வசதிகள், விலை உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த விஷயங்களாக இருக்கின்றன. ஆனால், ஹூண்டாய் எலீட் ஐ20 காரைவிட குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது.

07. மாருதி செலிரியோ

07. மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ கார் ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 9,604 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட் விலையில் சிறந்த தேர்வாக இருக்கிறது மாருதி செலிரியோ கார்.

06. ஹூண்டாய் எலீட் ஐ20

06. ஹூண்டாய் எலீட் ஐ20

இந்த பட்டியலில் இடம்பெற்ற இரண்டு ஹூண்டாய் மாடல்களில் ஒன்று ஹூண்டாய் எலைட் ஐ20 கார். கடந்த மாதத்தில் 11,460 எலீட் ஐ20 கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைனில் வாடிக்கையாளர்களை கொள்ளை கொண்டு விட்டது இந்த கார். அத்துடன் மிகச் சிறப்பான வசதிகளும் இதனை சிறந்த தேர்வாக வைத்திருக்கிறது.

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10

கடந்த மாதம் ஹூண்டாய் கிராண்ட் 10 கார் தனது வழக்கமான 5வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 13,010 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன. பட்ஜெட் விலையில் பிரிமியம் அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடலாக இருக்கிறது ஹூண்டாய் கிராண்ட் 10 கார்.

04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

என்றும் இளமை குறையாமல் வாடிக்கையாளர்களின் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கிறது மாருதி ஸ்விஃப்ட் கார். கடந்த மாதத்தில் 14,545 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்விஃப்ட் தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், விற்பனை சற்று கூடுதல்தான் என்பது ஆறுதல் தரும் விஷயம்.

03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதம் மூன்றாவது இடத்தில் மாருதி வேகன் ஆர் கார் இருக்கிறது. கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த இந்த கார் தற்போது ஒரு படி முன்னேறி உள்ளது. கடந்த மாதத்தில் 14,930 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற கார்.

02. மாருதி டிசையர்

02. மாருதி டிசையர்

இந்த செக்மென்ட்டில் பல புதிய மாடல்கள் வந்தாலும், மிகச் சிறப்பான தேர்வாக இருந்து வருகிறது மாருதி டிசையர் கார். கடந்த மாதத்தில் 15,087 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பதே இதன் மிகப்பெரிய பலம்.

01.மாருதி ஆல்ட்டோ

01.மாருதி ஆல்ட்டோ

மாருதி ஆல்ட்டோ கார் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 22,998 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு விற்பனையைவிட இது கூடுதல் என்பதுடன், ரெனோ க்விட் கார்கள் வந்தாலும் மாருதி ஆல்ட்டோ கார் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் டாப் 10 கார்கள்... 8 இடங்களை கைப்பற்றிய மாருதி!

தொடர்ந்து பல புதிய கார் பிராண்டுகள் மற்றும் புதிய புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாலும், கார் மார்க்கெட்டின் அசைக்க முடியாத சக்தியா மாருதி கார் நிறுவனம் விளங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, நம் நாட்டு கார் மார்க்கெட்டில் 50 சதவீத விற்பனை பங்களிப்பை மாருதி நிறுவனம் பெற்றிருக்கிறது. எனவே, வேறு எந்த நிறுவனமும் இந்த பட்டியலில் இடம்பிடிப்பது இப்போது குதிரை கொம்பான காரியமாகவே மாறி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Read in Tamil: Maruti Suzuki tops January sales list with 8 car models.
Story first published: Monday, February 27, 2017, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X