விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா கார்!

Written By:

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது மாருதி சுசுகி. இது ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்பரேஷனின் துணை நிறுவனமாகும். கடந்த ஆண்டு இந்த நிறுவனம் அறிமுகப்டுத்திய விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் குறுகிய காலகட்டத்தில் ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. கார் சந்தையில் இது ஒரு அரிதான நிகழ்வாகும்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் காம்பாக்ட் எஸ்யுவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸா கார் அறிமுகமாயின. இவை முற்றிலும் உள்நாட்டிலேயே டிசைன் செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டவை ஆகும். இதன் கவர்ச்சியான ஸ்டைல், செயல்திறன், மற்றும் மைலேஜ் காரணமாக இக்கார்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

மாருதி நிறுவனத்தின் முன்னணி கார் மாடலாக தற்போது பிரெஸ்ஸா கார்கள் விளங்கி வருகின்றன. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள்ளாகவே ஒரு லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது என்பது ஆட்டோமொபைல் துறையில் எளிதான நிகழ்வு அல்ல.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

ஒரு லட்சம் கார்கள் விற்பனையானது மட்டுமல்லாமல், மேலும் 50,000 கார்கள் புக்கிங் பெறப்பட்டு தயாரிப்பில் உள்ளன. தற்போது பிரெஸ்ஸா காரை வாங்க விரும்பினால் அதற்காக சில மாதங்கள் காத்திருக்க வேண்டும், ஏனெனில் இதன் காத்திருப்பு காலம் 7 மாதங்களாகும்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

மாருதி நிறுவனம் ஒரு கோடிக்கும் மேலான கார்களை விற்று இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக விளங்கி வருகிறது. இதற்கு முதல் காரணமாக விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் என்பதனை குறிப்பிடலாம்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

இந்தியாவில் எந்த ஒரு கார் நிறுவனத்தையும்விட அதிகமான சர்வீஸ் நிலையங்களை மாருதி அமைத்துள்ளது. 1,471 நகரங்களில் 1,820 விற்பனை நிலையங்களும் 3,145 சர்வீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த எண்ணிக்கையை 2020ஆம் ஆண்டிற்குள் 4000ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது மாருதி.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

பிரெஸ்ஸா கார்கள் அடைந்துள்ள வெற்றி குறித்து மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ். கலசி கூறும்போது, "மாருதி சுசுகி நிறுவனத்தின் துருப்புச் சீட்டாக பிரெஸ்ஸா கார் விளங்கி வருகிறது. ஸ்போர்டி லுக், ட்ரெண்டி டிசைன், உட்புற ஆடம்பற தோற்றம், சொகுசு, செயல்திறன் என அனைத்து அம்சங்களையும் பிரெஸ்ஸா எஸ்யுவி பூர்த்தி செய்துள்ளது" என்றார்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

ஸ்டைலிஷான இண்டீரியர், அதனுடனே சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள், டூயல் டோன் எக்ஸ்டிரியர் ஆஃப்ஷன், ரூஃப் டிசைன், எல்ஈடி விளக்குகள், ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் என பல்வேறு சிறப்புகளை பிரெஸ்ஸாவில் ஒருங்கினைத்துள்ளனர்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

பிரெஸ்ஸா கார் ஒரே ஒரு இஞ்சின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. இதில் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது இது. அதிகபட்சமாக 89 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இதில் உள்ளது.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணம் சிறப்பு வடிவமைப்பு செய்து தருவதற்காக ‘ஐ-கிரியேட்' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது மாருதி. இந்த திட்டத்திற்கு இளம் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பும் கிடைத்து வருவதாக மாருதி நிறுவன விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் கல்சி தெரிவித்தார்.

விற்பனையில் மாருதி பிரெஸ்ஸா கார் எட்டிய புதிய உச்சம்!

காம்பாக்ட் எஸ்யுவி பிரிவில் இந்தியாவிலேயே அதிக விருதுகளை பெற்றுள்ளது பிரெஸ்ஸா கார் மட்டுமே. இதில் மதிப்பிற்குரிய ‘இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2017' என்ற விருதும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி பலேனோ காரின் படங்கள்: 

English summary
Maruti Brezza has been the top-selling model in its segment and currently commands a waiting period of up to 7 months.
Story first published: Friday, March 3, 2017, 10:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark