விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

Written By:

இந்தியர்களின் நம்பகத்தையும், விருப்பத்தையும் ஒருசேர பெற்ற மாடல் மாருதி ஸ்விஃப்ட். பல புதிய மாடல்கள் மார்க்கெட்டில் குவிந்து வந்தாலும், மாருதி ஸ்விஃப்ட் காருக்குண்டான மகத்துவமும், மவசும் இன்னும் குறையாமல் சூப்பர் ஸ்டார் போல வலம் வருகிறது.

 விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

கையாளுமையில் மிகச் சிறப்பான மாடல் மாருதி ஸ்விஃப்ட். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும்போது மிகச் சிறப்பான கையாளுமையை வழங்கும் இந்த கார் பலரின் விருப்பமான மாடல்.

 விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

சட்டென கட் அடித்து செல்லும் அழகை கண்ட பலர், இதுதாண்டா எனது அடுத்த கார் என்பது போல மனதில் கனவுகளை தூண்டி விடும் மாடல் அது. அதேபோன்று, வாங்குவரோரின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்து வரும் மாடல்.

 விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

அது மைலேஜாக இருக்கட்டும், செயல்திறனாக இருக்கட்டும், மறுவிற்பனை மதிப்பாக இருக்கட்டும், எல்லாவற்றிலும் நிறைவை தரும் மாடல். இந்த நிலையில், இந்த காரின் கையாளுமை சிறப்பாக இருக்கும் அதே சமயத்தில் ஓட்டுனர்களின் அசட்டு தைரியத்தால் சமயத்தில் விபத்தில் சிக்கி விடுகிறது.

 விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

அவ்வாறு ஒரு மாருதி ஸ்விஃப்ட் கார் பெங்களூரில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த காரின் முகப்பு மோதிய வேகத்தில் மிக மோசமாக சேதமடைந்திருக்கிறது.

 விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

மோதிய வேகத்தில் பானட் மற்றும் எஞ்சின் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. அத்துடன், முன்புறத்தில் டேஷ்போர்டு வரை பாதிப்பை சந்தித்துள்ளது.

 விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

காருக்குள் பயணித்தவர்களின் நிலை குறித்த தகவல் இல்லை. இருப்பினும், முதல்வரிசை இருக்கையில் இருந்தவர்கள் பாதிப்பை சந்தித்திருக்கலாம். இந்த காரின் முன்புற கட்டுமானம் சற்றே பலவீனமாக இருப்பது இந்த மோதல் மூலமாக தெரிய வருகிறது.

 விபத்தில் சிக்கி மிக மோசமாக சேதமடைந்த மாருதி ஸ்விஃப்ட் கார்!

எனினும், விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை அம்சங்கள் பொருந்திய மாருதி ஸ்விஃப்ட் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும், கட்டுமானத்தையும் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Maruti Swift car crashed in Bangalore. Here are the images and details.
Story first published: Saturday, June 10, 2017, 13:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark