விற்பனையில் மாருதி வேகன் ஆர் காரின் இமாலய சாதனை!

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மாருதி நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் மிக ஸ்திரமான பங்களிப்பை அளித்து வரும் மாடல் வேகன் ஆர். பட்ஜெட் கார் பிரியர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் என்ற பெருமையும் மாருதி வேகன் ஆர் காருக்கு உண்டு. இந்த நிலையில், விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது மாருதி வேகன் ஆர் கார்.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

ஆம். அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 2 மில்லியன் மாருதி வேகன் ஆர் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், மாருதி 800 மற்றும் ஆல்ட்டோ கார்களுக்கு அடுத்து விற்பனையில் 2 மில்லியனை கடந்த மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

மார்க்கெட்டில் மிக நீண்ட காலமாக இருந்தாலும், தொடர்ந்து அசைக்க முடியாத விற்பனை வளர்ச்சியை மாருதி வேகன் ஆர் பதிவு செய்து வருகிறது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

கடந்த 1999ம் ஆண்டு மாருதி வேகன் ஆர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வரும் இந்த கார் கடைசியாக 2013ம் ஆண்டில் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் சிறிய அளவிலான மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

'டால் பாய்' டிசைன் எனப்படும் உயரமான உடற்கூடு அமைப்புடைய சிறிய வகை கார் மாடலாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், அதிக உயரம் கொண்டவர்களுக்கும் மிக வசதியான காராக இருக்கிறது. 4 பேர் செல்வதற்கு ஏற்ற சிறந்த கார் மாடலாகவும் விளங்குகிறது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிக ஏற்ற கார். அடக்கமான வடிவமைப்பு மூலமாக போக்குவரத்து நெரிசல்களிலும், பார்க்கிங் செய்வதிலும் எளிதாக இருக்கிறது. இதனால், முதல் முறை கார் வாங்கி கற்றுக் கொள்வோருக்கும், பட்ஜெட் கார் வாங்க விரும்புவோருக்கும் தேர்வில் முதலிடம் வகிக்கிறது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

இந்த காரில் 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. இதுதவிர்த்து, சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக கருத முடியும்.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

மேலும், எரிபொருள் சிக்கனத்திலும் மிகச் சிறந்த கார் என்ற நம்பகத்தன்மையை வாடிக்கயாளர்களிடத்தில் பெற்றுவிட்டது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி மாடல் லிட்டருக்கு 26.6 கிமீ மைலேஜையும் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

இந்த காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக்குகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட வேரியண்ட்டிலும் கிடைக்கிறது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

பல்வேறு வசதிகளை அளிக்கும் இந்த கார் ரூ.4.21 லட்சம் முதல் ரூ. 5.41 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதனால், மிகச் சிறந்த பட்ஜெட் கார் மாடலாகவும் இருக்கிறது.

மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் இமாலய சாதனை!

மாருதி நிறுவனத்தின் மிகச் சிறப்பான சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பும் இந்த காரின் வெற்றிருக்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே, மாருதி வேகன் ஆர் கார் விற்பனையில் மேலும் பல புதிய மைல்கற்களை எட்டும் என்று கருதலாம்.

Source: Financial Express

Most Read Articles
English summary
As per Financial Express, Maruti Wagon R became the third car from the carmaker to reach 2 million sales milestone after the Alto and the discontinued Maruti 800.
Story first published: Friday, September 22, 2017, 12:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X