மெர்சிடிஸ்-ஏ.எம்.ஜி உருவாக்கி வரும் அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் கார்

Written By:

நடைபெற்று முடிந்த நியூயார்க் கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பல மாடல் கார்களை விட அறிவிக்கப்பட்ட நிலையிலுள்ள் ஒரு மாடல் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

இதுவரை இல்லாத புதிய ஆற்றல் பெற்ற எஞ்சின் கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவில் தற்போதைய தலைமுறைக்கு ஏற்றவாறு வெளிவரயிருக்கும் அந்த குறிப்பிட்ட காரை, ஆடம்பர கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மெர்சிடிஸ் தயாரித்துள்ளது.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஏ.எம்.ஜி பொறியாளர்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த 2.0 சிலிண்டர் கொண்ட எஞ்சினை A45 மற்றும் CLA45 மாடல்க் கார்களுக்காக உருவாக்கியுள்ளனர்.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

தற்போதிருக்ககூடிய 2.0 லிட்டர் கொண்ட எஞ்சின் மூலம் 375 பி.எச்.பி பவர் மற்றும் 475 என்.எம் டார்க் திறன் கிடைக்கிறது. இதற்கு காரணம் தற்போதைய மாடல் எஞ்சினில் இருக்கக்கூடிய ட்வின் - ஸ்கிரால் டர்போ சார்ஜராகும்.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

இந்தாண்டில் நடைபெற்ற நியூயார் கார் கண்காட்சியின் போது ஏ.எம்.ஜி பொறியாளர்களில் ஒருவர் கார் டிவைஸ் இணையதளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில், புதியதாக தயாரிக்கப்பட்டு வரும் A45 மாடலில் முற்றிலும் புதுமையான எஞ்சின் இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

2.0 லிட்டர் டர்போர் சார்ஜருக்கு பிறகு மெர்சிடிஸ் மேலும் ஆற்றல் வாய்ந்த எஞ்சினை உருவாக்குவது கடினம் என ஆட்டோமொபைல் உலகின் நிலவி வந்த கருத்தை, தகர்ந்து எரிந்துள்ளது மெர்சிடிஸ் நிறுவனம்.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

ஏ.எம்.ஜி பொறியாளர் அளித்த அந்த பேட்டியில், அவர் மேலும் கூறும்பொழுது "மேம்படுத்தப்பட்ட ஆற்றல் வாய்ந்த 2.0 சிலிண்டர் எஞ்சின் குறித்து என்ன தகவலும் கூறமுடியாது, ஆனால் அதன் மூலம் 400 பி.எச்.பி கிடைக்கும் என்பது உறுதி" என்று கூறினார்.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

இந்த காரினுடைய கம்பரஸர்கள் மின்சாரத்தால் இயங்குபவை, இதுபற்றி பேசிய ஏ.எம்.ஜி பொறியாளர் இதுபோன்ற தொழில்நுட்பத்தில் இயங்கும் எஞ்சின் ஏற்கனவே வந்துவிட்டதாகவும்.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

இருந்தாலும் மின்சார கம்பரஸரால் எஞ்சினுக்கு எந்த பயனும் இல்லாதல் வகையில் தயாரிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 2.0 லிட்டர் மூலம் கூடுதலாக 25 பி.எச்.பி பவர் பெறுவதும் பொறியாளர்களின் திட்டமாக உள்ளது.

அதிக ஆற்றல் பெற்ற A-கிளாஸ் காரை உருவாக்கி வரும் மெர்சிடிஸ்

புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்டுள்ள மெர்சிடிஸின் A45 அடுத்தாண்டு நடைபெறவுள்ள முக்கியமான கார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்குள் மெர்சிடிஸின் புதிய A45 காரின் எஞ்சின் திறனும் மாற்றியமைக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

English summary
Executive comments hint AMG engineers have developed an even more powerful 2.0-litre four-cylinder engine for the A45.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark