மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிஎல்ஏ 45 ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.77.85 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 45 காரை இந்தியாவில் ரூ. 77.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் வெளியிட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சிஎல்ஏ 45 செயல்திறன்

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி சிஎல்ஏ 45 செயல்திறன்

மெர்சிடிஸின் இந்த புதிய காரில் ஏஎம்ஜி-யின் மாற்றியமைக்கப்பட்ட 2.0 லிட்டர் டர்போ 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. 1991சிசி திறன் பெற்ற இந்த எஞ்சின் 375 பிஎச்பி பவர் மற்றும் 475 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மெர்சிடிஸ்-ஏம்எம்ஜி ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

4-மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த காரில் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
மெர்சிடிஸ்-ஏம்எம்ஜி ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மெர்சிடிஸின் ஜிஎல்ஏ 45 ஏஎம்ஜி கார் 4.4 விநாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும். இதனுடைய அதிகப்பட்ச வேகம் மணிக்கு 250 கிமீ என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் சிஎல்ஏ 45 டிசைன் & அம்சங்கள்

மெர்சிடிஸ் சிஎல்ஏ 45 டிசைன் & அம்சங்கள்

மெர்சிடிஸ் ஜிஎல்ஏ 45 ஏஎம்ஜி காரில் கொஞ்சம் தூக்கிய நிலையில் முன்பக்கம் மற்றும் ரியர் பம்பர்கள் அதுவும் புதிய ஸ்பிளிட்டர் தேவையுடன் அமைந்திருக்கின்றன.

மெர்சிடிஸ்-ஏம்எம்ஜி ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதே காரில் உள்ள ஏய்ரோ எடிசன் காரில் முழுவதுமாக பளிச்சிடும் கருப்பு நிறத்தில் பூச்சுவேலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ்-ஏம்எம்ஜி ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

டிஃபூயஸர், சைடு ஸ்கர்ட்ஸ், ஓஆர்விஎம் மற்றும் புதிய 19 இஞ்ச் அலாய் சக்கரங்கள் ஆகியவை இந்த காரின் வடிவமைப்பில் கவனமீர்க்கின்றன.

மெர்சிடிஸ்-ஏம்எம்ஜி ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 45 கார் உள்கட்டமைப்பில் புதிய ஜிஎல்ஏ 45 காரை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. 8.0 இஞ்ச் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா போன்றவை இந்த காரின் முக்கிய அம்சங்கள்.

மெர்சிடிஸ்-ஏம்எம்ஜி ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மெர்சிடிஸின் ஏஎம்ஜி ஜிஎல்ஏ 45 கார் ஏற்கனவே சிறந்த வேகம் கொண்ட எஸ்யூவி மாடலாக அறியப்பட்டுள்ளது. தற்போது இந்த காரின் மேற்கொள்ளப்பட்டுள்ள பூச்சு வேலைப்பாடுகள் காரணமாகவே இது உங்களை மேலும் வசிகரிக்கும்.

English summary
Read in Tamil: Mercedes-AMG GLA 45 Facelift Launched At Rs 77.85 Lakh In India. Click for Details...
Story first published: Tuesday, November 7, 2017, 17:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark