தானியங்கி கார்களை தயாரிக்க பாஷ் ,டெய்ம்லர் , பென்ஸ் கூட்டணி
பிரபல ஜெர்மன் நிறுவனங்களான டெய்ம்லர், மெர்சடிஸ் மற்றும் பாஷ் இணைந்து தானாக இயங்கும் திறன் பெற்ற கார்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல தானாக இயங்கக்கூடிய தொழில்நுட்பம் கொண்ட கார்களை உருவாக்குவதில் இன்னும் ஆரம்பநிலையில் தான் இருக்கின்றன. தன்னிலை வாகன தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை உருவாக்குவதில் பிரபல நிறுவனங்களில் தொழிலாளர்கள் தற்போது தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்த துறையில் புதிய செய்தியாக தானியங்கி வாகனங்களை தயாரிக்கும் பணிகளுக்காக பிரபல ஜெர்மன் நிறுவனங்களான பாஷ் மற்றும் டெய்ம்லர் இணைந்துள்ளன. இரு நிறுவனங்களும் ஓட்டுநர் தேவைப்படாத முற்றிலும் தன்னிச்சையாக இயங்கும் திறன் பெற்ற வாகனங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.

கார் தயாரிப்பில் முன்னணியாக இருக்கும் டெய்ம்லர் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் முன்னணியிலுள்ள பாஷ் ஆகியவை கூட்டணி ஒப்பந்தத்தில் பெரும்பாலான பங்கு டெய்ம்லருக்கு தான் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த இரு நிறுவனங்களுக்கிடையே பொருளாதார ஒப்பந்தம் குறித்த தகவல்களும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெய்ம்லர் மற்றும் பாஷ் நிறுவனங்களின் தானியங்கி கார் பொது போக்குவரத்து ஊர்தியாகத்தான் வெளிவரவுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் மூலம் இயக்கப்படும் வாடகை காராக, நகர வீதிகளின் சாலைகளில் அது பயணிக்கவுள்ளது. அதற்காக ஒரூ செயலி உருவாக்கப்பட்டு, அதன்மூலம் பொதுமக்கள் தானாக இயக்கம் கொண்ட கார்களை தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் காரின் செயல்பாடுகள் இருக்கும் வகையில் இரு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன.

இந்த கூட்டணியில் உருவாகும் தானியங்கி கார் பெரும்பாலும் 2030ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரலாம் என தகவல்கள் கூறுகின்றன. தயாரிப்பு நிலையிலேயே திருத்தமான தொழிநுட்ப உதவியுடன் கார் வடிவமைக்கப்படும் வகையில் டெய்ம்லர் மற்றும் பாஷ் நிறுவனங்கள் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளன.

பாஷ் மற்றும் டெய்ம்லர் நிறுவனங்களுக்கு முன்னதாகவே மற்றொரு ஜெர்மன் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் ஏற்கனவே பாஷ் உடன் இணைந்து தானாக இயங்கும் கார்கள் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த காரை வடிவமைப்பதற்கான பணிகளை அந்நிறுவனம் 2015ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.

ஆனால் பாஷ் உடன் இணைந்து மெர்சிடிஸ் தயாரித்து வரும் இந்த தானியங்கி கார் முற்றிலும் ஆடம்பர வசதிகளை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. எஃப்-015 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் தானாக இயங்கும் தொழில்நுட்பத்துடன் மின்சார பயன்பாட்டிலும் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மெர்சிடிஸின் தானாக இயங்கும் திறன் பெற்ற கார்கள் மின்சாரத்தால் கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய திறன் பெற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான பணிகளை குறித்த காரின் முன்மாதிரிகளை குறித்து தற்போது வரை மெர்சிடிஸ் திட்ட வடிவங்களை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








