மெர்சிடிஸ் சி-கிளாஸ் மாடலில் புதிய 'சி எடிசன்' கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சி-கிளாஸ் காரில் 'எடிசன் சி' என்ற புதிய பதிப்பை ரூ.42.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) தொடக்க விலையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

தற்போதைய சி-கிளாஸ் மாடலில் உள்கட்டமைப்பு மற்றும் வெளிக்கட்டமைப்பில் புதிய ஸ்போர்டியர் தரத்தை பெற்றுள்ள காராக எடிசன் சி வெளியாகியுள்ளது.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

மேலும் சி 200, சி 200டி மற்றும் சி250டி அவான்ட்கிராட் போன்ற மெர்சிடிஸின் சி-சிரீஸ் கார்கள் அனைத்திலும் புதிய எடிசன் சி மாடல் கிடைக்கும்.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

எடிசன் சி கார் மூலமாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் புதிய ’ஹயசிந்த் ரெட்’ என்ற நிற பூச்சை தனது தயாரிப்புகளில் அறிமுகம் செய்துள்ளது.

Recommended Video
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

இந்தியாவிற்கான மெர்சிடிஸின் நிர்வாக இயக்குநர் ரோலண்ட் ஃபால்ஜர் புதிய எடிசன் சி மாடல் காரை அறிமுகம் செய்து வைத்தார். மற்றும் அதற்காக டீலர்கள் குறித்த விவரங்களையும் ஃபால்ஜர் வெளியிட்டார்.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

ஆப்ரான் ஸ்பாய்லர், கருப்பு நிறத்திலான ரியர் ஸ்பாய்லர், கிளாஸ் பிளாக் நிறத்திலான 5-ட்வின் ஸ்போக் அலாய் சக்கரங்கள், மற்றும் எடிசன் சி முத்திரை ஆகியவற்றை இந்த கார் தனது வெளித்தோற்றதில் பெற்றுள்ளது.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் ‘எடிசன் சி' காரின் விலை

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் ‘எடிசன் சி' மாடலின் வேரியண்டுகள் விலை
சி 200 அவன்டகார்டே ரூ.42.54 லட்சம்
சி 200 டி அவன்டகார்டே ரூ.43.54 லட்சம்
சி 250டி அவன்டகார்டே ரூ.46.87 லட்சம்
மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

மேலும் இந்த காரில் முன்பக்க ட்வின் லோவர்ஸ், மிரர் ஹவுஸிங்க்ஸ், பெல்டுலைன் மற்றும் கருப்பு நிறத்திலான சைடு ஸ்கெர்ட்ஸ் போன்ற தேவைகள் அடங்கியுள்ளன.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

சி-கிளாஸின் புதிய எடிசனில் முன்பக்க கதவுகளுக்கான எல்.இ.டி லோகா பிரொஜக்டர் இடம்பெற்றிருப்பது கூடுதல் அம்சமாக உள்ளது.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

கருப்பு சாம்பல் நிற கலவையால் ஆன வுட் ட்ரிம் ஃபினிஷ், ரப்பர் தன்மையை கொண்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்போர்ட்ஸ் பெடல், எல்லா வேரியண்டுகளிலும் நேவிகேஷன் அமைப்பு போன்ற தேவைகள் உள்ளன.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

எடிசன் சி காரை அறிமுகம் செய்துவிட்டு மெர்சிடிஸ் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநர் ரோலண்ட் ஃபால்ஜர் பேசும்போது,

"சி கிளாஸ் இந்தியாவில் மிகவும் வரவேற்பு பெற்ற மாடல். இந்த புதிய 'எடிசன் சி' மாடலும் அதேபோல் விற்பனை திறனை பெறும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

சி-கிளாஸ் மாடல் காரில் எடிசன் சி பதிப்பு அதற்கான ஸ்போர்டியர் தரத்தை உயர்த்தும் நோக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டுள்ளது.

மெர்சிடிஸ் சி-கிளாஸ் புதிய எடிசன் ’சி பதிப்பு’ அறிமுகம்!

தோற்றப்பொலிவில் மட்டும் சில மாறுபாடுகளை இந்த கார் பெற்றிருந்தாலும், எடிசன் சி மாடலில் உள்கட்டமைப்பு புதிய கட்டமைப்புகளை பெற்றிருப்பது இன்னும் சிறப்பு.

English summary
Read in Tamil: Mercedes Benz C Class Edition C Launched in India Price, Specification, Images. Click for More...
Please Wait while comments are loading...

Latest Photos