71வது சுதந்திர நாளில் மெர்சிடிஸின் புதிய ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

இந்தியாவின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஜிஎல்சி 'செலிபிரேஷன் எடிசன்' எஸ்.யூ.வி மாடல் காரை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த மாடல் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என இருவேறு தேவைகளிலும் வெளிவந்துள்ளது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி 220டி என்ற பெயரில் வரும் இந்த கார் இந்தியாவில் ரூ.50.86 லட்சம் விலை மதிப்புப்பெறுகிறது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

இந்த செலிபிரேஷன் எடிசன் மாடலில் பேன் இந்தியா விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்புப்படி ரூ.51.25 லட்சம் மதிப்புப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

புதிய ஜிஎல்சி செலிபிரேஷன் காரின் வெளிப்புற கட்டமைப்புகளில் எல்.இ.டி லோகோ ப்ரோஜெக்டர், ஹை கிளாஸ் பிளாக் நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வெளிப்புற கண்ணாடிகள் உள்ளன.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

அதிக பளிச்சிடும் கிரோம் ட்ரிம், பின்புறத்தில் உரித்தலான கிரோம் ட்ரிம் போன்ற கவர்ந்து இழுக்கும் அம்சங்களும் காருக்கான தேவைகளில் நம்மை ஈர்க்கின்றன.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

எடிசன் மாடலின் உள்புற கட்டமைப்புகளில் ஸ்போர்ட்ஸ் பெடல்ஸ், கார்மின் நேவிகேஷன் அமைப்பு (MAP PILOT) போன்ற கட்டமைப்புகள் உள்ளன.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

புதிய எடிசன் மாடலை குறித்து பேசிய மெர்சிடிஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி ரோனால்ட் ஃபால்ஜர்,

"ஸ்போர்ட் திறனுடன் ஆடம்பர தேவை உடன் கூடிய வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான இந்த புதிய எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

முதல்தேவை வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு வந்துள்ள இந்த காரின் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள் நிச்சயம் தொழில்நுட்ப தரத்தில் தனித்துவமாக இருக்கும்" என்று கூறினார்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

மெர்சிடிஸ் நிறுவனம் ஜிஎல்சி மாடல் கார்கள் நல்ல விற்பனை திறனை இந்தியாவில் பெறவேண்டும் என்று எண்ணுகிறது. அதற்கான தேவைகளுடன் அந்நிறுவனம் இந்தியாவில் இயங்கி வருகிறது.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

இவ்வாறு சிறப்பு வாய்ந்த நாளில் ஜிஎல்சி எஸ்.யூ.வி ‘செலிபிரேஷன் எடிசன்' காரை வெளியிட்டதன் மூலம் இந்தியாவில் வாடிக்கையாளர்களை நேரடியாக கவர்ந்துள்ளது மெர்சிடிஸ்.

மெர்சிடிஸ் ஜிஎல்சி ‘செலிபிரேஷன் எடிசன்’ விற்பனைக்கு அறிமுகம்

குறைந்த எண்ணிக்கையில் வந்துள்ள ஜிஎல்சி எஸ்.யூ.வியின் இந்த புதிய எடிசன் விற்பனையிலும் புதிய சாதனை படைக்கலாம் என இந்தியாவின் ஆட்டோமொபைல் உலகம் கருதுகிறது.

English summary
Read in Tamil: Mercedes-Benz Introduces GLC ‘Celebration Edition’; Priced At Rs 50.86 Lakh. Click for Details...
Story first published: Monday, August 14, 2017, 17:28 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos