உலகளவில் 10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம்

உலகளவில் 10 லட்சம் கார்களை திரும்பப்பெறுவதற்கான அறிவிப்பை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஜெர்மனியின் உலகப் புகழ் பெற்ற சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடஸ் பென்ஸ். இந்நிறுவன கார்களின் இஞ்சின் பகுதியில் தீ விபத்துகள் ஏற்படுவதாக சமீபத்தில் புகார்கள் குவிந்தன. இதனையடுத்து தற்போது உலகம் முழுவதும் 10 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் பென்ஸ் நிறுவனம்!

பென்ஸ் கார்களின் இஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக உலகம் முழுவதும் 51 புகார்கள் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு சென்றது. இதில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருந்து தான் பெரும்பாலான புகார்கள் சென்றன.

10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் பென்ஸ் நிறுவனம்!

இது குறித்து ஆராய்ந்த பென்ஸ் நிறுவனம், அதிக முறை இஞ்சினை ஸ்டார்ட் செய்யும் போது, ஸ்டார்டர் மோட்டார் அதிகம் வெப்பமாகிறது, இது அருகிலிருக்கும் உதிரி பாகங்களை சூடாக்கி தீப்பற்ற காரணமாகியுள்ளது என்பதை கண்டறிந்தனர்.

10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் பென்ஸ் நிறுவனம்!

தீ விபத்து சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது 2015ஆம் ஆண்டிற்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடையில் தயாரிக்கப்பட்ட சி-கிளாஸ், இ-கிளாஸ், சிஎல்ஏ, ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்சி மாடல் கார்களாகும்.

10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் பென்ஸ் நிறுவனம்!

3,07,629 கார்கள் அமெரிக்காவிலும், 75,000 கார்கள் இங்கிலாந்திலும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மெர்சிடஸ் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதர நாடுகளில் எத்தனை கார்கள் பாதிக்கப்பட்டவை என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

10 லட்சம் கார்களை திரும்பப்பெறும் பென்ஸ் நிறுவனம்!

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட கார்களில் ‘கரண்ட் லிமிட்டர்' எனப்படும் ஃபியூஸ் ஒன்று கூடுதலாக பொருத்தப்படும் என்றும் இதனால் எத்தனை முறை வேண்டுமானாலும் இஞ்சினை ஸ்டார்ட் செய்துகொள்ளலாம் எனவும், விளக்கம் தரப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகமான மெர்சிடஸ் பென்ஸ் 2017 இ-கிளாஸ் காப்ரியோலட் காரின் படங்கள்:

More from DriveSpark

Article Published On: Monday, March 6, 2017, 13:22 [IST]
English summary
Mercedes-Benz has issued a recall for cars globally after cases of fire in the engine compartment were reported.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+