மெர்சிடிஸின் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் ரூ.1.21 கோடியில் விற்பனைக்கு அறிமுகம்

இரவு நேர பயணங்களுக்கான ’நைட் விசிபிலிட்டி’ மற்றும் அதிகமான சொகுசு வசதிகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் காரை வடிவமைத்துள்ளது.

By Azhagar

ஜெர்மனின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மெர்சிடிஸ் கோனெஸ்ஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்

எஸ்.350 டி மற்றும் எஸ்.400 என இரண்டு விதமான மாடல்களில் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எஸ்.350 டி மாடல் காரின் விலை ரூ.1.21 கோடிக்கும் மற்றும் எஸ்.400 கார் ரூ.132 கோடிக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மெர்சிடிஸ் கோனெஸ்ஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்

உலகில் வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான விபத்துகள் இரவு நேரங்களில் தான் நடக்கின்றன. அதை தடுப்பதற்கான புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த மெர்சிடிஸ் பென்ஸ் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் கோனெஸ்ஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்

ஆடம்பர கார்களுக்கான அனைத்து வசதிகளும் இதில் இருந்தாலும், இரவு நேர பயணங்களுக்கான 'நைட் வியூ அஸிஸ்ட்' என்ற தொழில்நுட்பம் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் காரில் வரவேற்கப்பட வேண்டியதாக உள்ளது.

மெர்சிடிஸ் கோனெஸ்ஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்

கும்மிருட்டில் கூட சாலைகளை தெளிவாக காட்டக்கூடிய வகையில் 'நைட் வியூ அஸிஸ்ட்' தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் இருக்கும்.

இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் யாரேனும் பாதசாரிகள் அல்லது விலங்குகள் குறுக்கிட்டால் இந்த தொழில்நுட்பத்தை வைத்து ஒட்டுநர் உடனே சுதாரித்துக்கொள்ள முடியும்.

மெர்சிடிஸ் கோனெஸ்ஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்

இதுபோன்ற வசதிகள் மட்டுமல்லாமல், மெர்சிடிஸின் புதிய எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் காரில் இரவு நேர பயணங்களுக்கான பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து 40 சதவீதத்திலான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ் கோனெஸ்ஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்

மேலும் இதில் இருக்கூடிய வசதிகளை குறித்து பார்த்தால், முன் இருக்கைக்கு பின்னால் இருக்கையை நாம் 43.5 டிகிரி வரை சாய்த்துக்கொள்ளலாம் அதுவும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.

இதனுடன் கால்களை வைத்துக்கொள்ள மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஃபூட்ரெஸ்ட் வசதியும் உள்ளது. காரில் ஓய்வெடுக்க நினைப்பவர்களுக்கு இந்த வசதிகள் சிறந்தவையாக இருக்கும்.

மெர்சிடிஸ் கோனெஸ்ஸர் கார் விற்பனைக்கு அறிமுகம்

காரின் உள் மற்றும் வெளிப்புகு காற்றுகளை தரம் பார்த்து, அதன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய 'ஏர் பேலன்ஸ் பேக்கேஜ்' என்ற தொழில்நுட்பம் எஸ்-கிளாஸ் கோனெஸ்ஸர் காரில் உள்ளது.

இதனால் சாலை பயணத்தின் போது மாசடைந்த காற்றை சுவாசிக்கக்கூடிய வாய்ப்புகள் தவிர்க்கப்படும். மேலும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 'ஏர் பேலன்ஸ் பேக்கேஜ்' தொழில்நுட்பம் மேம்படுத்தி தரப்படும்.

Most Read Articles
English summary
The new Mercedes-Benz Connoisseur's Edition offers better night visibility and increased comfort at the back.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X