இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் மெர்சிடிஸ் எஸ்- கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்: ஸ்பை படங்கள்
இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் மெர்சிடிஸ் எஸ்- கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்: ஸ்பை படங்கள்..!!
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், புதிய எஸ் கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை வெளியிட தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் இந்த காருக்கான சோதனை ஓட்டத்தை சிறப்பு உபகரண உதவியுடன் மெர்சிடிஸ் மேற்கொண்டு வருகிறது.

சாலைகளில் வலம் வரும் புதிய வெள்ளை நிற எஸ்-கிளாஸ் காரில் சிறப்பு இயந்திரம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இது அந்த கார் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வருவதை குறிக்கும் விதமாக செயல்படுகிறது.

தற்போதிருக்கும் எஸ்- கிளாஸ் மாடல் போலவே 2018 எஸ் கிளாஸ் கார் காட்சியளிக்கிறது. இருந்தாலும் சிலபல புதிய கட்டமைப்புகளை வைத்து, எஸ்- கிளாஸின் மைனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இதை கருத்தில் கொள்ளலாம்.

இந்த செடான் கார் வெளிப்புற தோற்றதில் புத்தம் புதிய முகப்பு விளக்குகள், டெயில் விளக்குகள் மற்றும் புதிய வடிவிலான முன்பக்க மற்றும் ரியர் பகுதிகளுக்கான பம்பர்களை பெற்றுள்ளது.
Recommended Video


இவற்றை தவிர காரின் மொத்த வெளித்தோற்றமும், தற்போது விற்பனையில் உள்ள எஸ்- கிளாஸ் மாடலை போலவே தயாரிக்கப்பட்டு இருப்பதை நாம் காண முடிகிறது.

தொடர்ந்து புதிய எஸ்- கிளாஸ் காரின் உள்கட்டமைப்பில் 12.3 துல்லியமான காட்சியளுக்குடன் கூடிய திரை, உயர் ரக லெதர் வேலைபாடுகள் மற்றும் மரத்தோற்றத்திலான டாஷ் போர்டுகள் மற்றும் இருக்கைக்கான பார்டர் கம்பிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இருக்கைகளில் வாசனை செயல்பாடுகள் மற்றும் அமர்பவர்களுக்கு காற்றோட்டம் தரும் அம்சங்களும் புதிய மெர்சிடிஸ் 2018 எஸ்- கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இடம்பெற்றுள்ளன.

தற்போது எஸ் கிளாஸ் 350டி மாடலில் இருக்கும் 3 லிட்டர் வி6 எஞ்சினுக்கு பதிலாக, இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புத்தம் புதிய 3 லிட்டர் ஸ்டெரயிட் 6 டீசல் எஞ்சின் உள்ளது.

செடான், கூபே மற்றும் கன்வெர்டிபிள் என மூன்று வித அமைப்புகளில் 2018 எஸ் கிளாஸ் காரை மெர்சிடிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

முற்றிலும் இந்தியாவில் தயாராகி வரும் புதிய எஸ்-கிளாஸ் காரை பின்பற்றியே இதனுடைய புதிய ஏஎம்ஜி வெர்ஷனும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில பல மாற்றங்களுடன் காட்சியளிக்கும் 2018 எஸ் கிளாஸ் கார், 2018ல் வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,
தற்போது மெர்சிடிஸ் கார் ஆர்வலர்கள், டீலர்கள் உட்பட பல வாடிக்கையாளர்களிடம் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








