புதிய சி-கிளாஸ் காரில் தனது ஆஸ்தான முத்திரையை நீக்குகிறது மெர்சிடிஸ்... காரணம் இதுதான்..!!

Written By:

அதிக செயல்திறன், தேர்ந்த திறன் என்று என்னதான் கார்கள் புதிய தொழில்நுட்பங்களோடு தயாரிக்கப்பட்டு இருந்தாலும், கார்கள் தாங்கி இருக்கும் முத்திரை தான் அவைகளை வெளி உலகில் பிரபலப்படுத்துகின்றன.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

அதுபோன்ற ஒரு பிரபலமான முத்திரையை பெற்றுள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது அதிக விற்பனை திறனை பெற்றுள்ள மாடலில் இருந்து அந்த முத்திரையை நீக்கி இருக்கிறது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

அந்த நிறுவனம் மெர்சிடிஸ், மாடல் சி-கிளாஸ். மெர்சிடிஸின் மூன்று கூர்மையான கோணங்களை கொண்ட முத்திரை, உலகளவில் பிரபலமானது.

Recommended Video - Watch Now!
2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

இந்த முத்திரை ஆபரணத்தை சி-கிளாஸ் மாடலில் இருந்து அகற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

அமெரிக்காவில் கொஞ்ச நாட்களாகவே சி-கிளாஸ் மாடல் கார் பெரியளவில் விற்பனை திறனை பெறுவது கிடையாது.

இதை குறித்து ஆராய்ந்த மெர்சிடிஸ் நிறுவனம், வாடிக்கையாளர்கள் மனதை எளிதாக ஒரு விஷயத்தின் மூலம் புரிந்துக்கொண்டது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

மெர்சிடிஸின் ஆஸ்தான மூன்று நட்சத்திர கூர்மையான முத்திரை மிகவும் பழைய பாணியில் இருப்பதாக அமெரிக்க வாடிக்கையாளர்களின் எண்ணம் இருக்கிறது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

தனது ஆராய்ச்சியின் முடிவில் தெரிந்துக்கொண்ட மெர்சிடிஸ் நிறுவனம் தற்போது இளைஞர்களை கவரும் வகையில் அதற்கான வழிமுறைகளோடு கார்களை தயாரித்து வருகிறது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

இந்நிலையில் பழைய பாணியில் இருப்பதாக கருதப்படும் இந்த முத்திரையை சி-கிளாஸ் மாடல் இருந்து நீக்குவதே சரி என மெர்சிடிஸ் முடிவு செய்திருக்கிறது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

இதனால் 2018 மெர்சிடிஸ்-பென்ஸ் சி கிளாஸ் மாடலில் முத்திரை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

இந்த மாற்றத்துடன் வெளிப்புற, உட்புற மற்றும் ஸ்டைலிங் ஆகியவற்றிலும் 2018 சி கிளாஸ் மாடல் கார் பெரியளவில் மாற்றத்தை பெறுகின்றன.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

மேலும் இந்த காரில் சி300 மற்றும் சி350இ போன்ற புதிய மாடல்களும் வெளிவருகின்றன. இவற்றுடன் ஏ.எம்.ஜி வெர்ஷனிலும் இந்த கார் வெளிவருகிறது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

இளைஞர்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் 2018 சி-கிளாஸ் காரில், பல்வேறு மாற்றங்களை மெர்சிடிஸ் மேற்கொண்டுள்ளது.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

ஆனால் இவை அனைத்தும் வெற்றிப்பெறுமா என்பது தெரியவில்லை. ஆனால் வெற்றியடைந்தால் அது மெர்சிடிஸிற்கு மகிழ்ச்சியே.

2018 சி-கிளாஸ் காரில் மெர்சிடிஸ் முத்திரை இடம்பெறாது..!!

அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளை பொறுத்தவரை மெர்சிடிஸின் முத்திரை ஒரு பெரிய கௌரவமாகவே பார்கக்கூடியவர்கள் அதிகளவில் உள்ளனர்.

English summary
Read in Tamil: Mercedes-Benz Will No More Offer The Three-Pointed Hood Ornament On The C-Class. Click for Details...
Story first published: Friday, September 1, 2017, 16:36 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark