சொந்த நாட்டில் சோகத்தை தேடிக்கொண்ட மெர்சிடிஸ்... இதற்காக இப்படி ஒரு நிலைமை..??
சொந்த நாட்டில் சோகத்தை தேடிக்கொண்ட மெர்சிடிஸ்... இதற்காக இப்படி ஒரு நிலைமை..??
நச்சுப்புகை அதிகம் வெளியேறுவதாக ஜெர்மனி அரசு தெரிவித்த புகாரை அடுத்து, இ 350டி மாடல் காரில் மறுசீரமைப்பு பணிகளை மெர்சிடிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதனால் இதனுடைய விற்பனையை தற்போதைக்கு ஜெர்மனி உட்பட ஐரோப்பாவின் சில பகுதிகளில் நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ 350டி மாடல் காரின் 3.0 லிட்டர் பெற்ற ட்வின் டர்போசார்ஜிடு வி6 எஞ்சின் உள்ளது. இந்த மாடல் காரில் இருந்து நச்சு வாய்வு கொண்ட நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) அதிகளவில் வெளியெறுவதாக புகார் எழுந்தது.
Recommended Video


இதனால் தற்போது இந்த காரில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தனது பொறியாளர்களுக்கு உத்தரவிட்டது மெர்சிடிஸ்.

நைட்ரஜன் ஆக்ஸைடு வாயு வெளியேறுவதை கட்டுபடுத்துவதற்காக எஸ்.சி.ஆர் எனப்படும் ஊக்கியை மெர்சிடிஸின் பொறியாளர்கள் இ 350டி காரில் பொருத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறைப்பு நடவடிக்கை என்ற விரிவாக்கத்தை கொண்ட எஸ்.சி.ஆர், நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை, நைட்ரஜன் வாயு அல்லது தண்ணியாக மாற்றும் திறன் கொண்டது.

இதற்கான செயல்முறைக்காக எஸ்.சி.ஆர் ஊக்கியில், 32.5 சதவீத யூரியா மற்றும் 67.5 சதவீத தணியாத நீர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இவை ஊக்கியால் ஊறிஞ்சப்பட்டு, வெளியேறும் நைட்ரஜன் ஆக்ஸைடு மீது செலுத்தப்படும், அதன் மூலம் அந்த வாயு நச்சுப்பொறுந்தாத வாயுவாக மாறும்.

ஊக்கியாக இ 350டி காரில் செயல்படும் முறைக்கும் ’ஏட்ப்ளூ சொல்யூஷன்’ என்ற பெயரில் மெர்சிடிஸ் குறிப்பிடுகிறது.
தினமும் வெளியேறும் புகையில் இருந்து நச்சுப்புகையை நீராக்க பெரியளவில் சேமிப்பு திறன் தேவைப்படுகிறது.

அதற்காக இ 350டி காரில் 24.5 லிட்டர் ஏட்ப்ளூ சொல்யூஷனுக்கான தொட்டியை மெர்சிடிஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் அமைத்துள்ளனர்.

இடைநீக்கம் செய்யப்படும் இருக்கும் இ 350 டி காரை மீட்க, மெர்சிடிஸ் எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

மேலும் இந்தியாவில் இ 350டி எல்.டபுள்யூ.பி மாடல் கார் வெளிவரும் போது அதுவும் மாற்றியமைக்கப்பட்டு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








