மாருதி பலேனோ, எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் கால்பதிக்கும் புதிய ஹேட்ச்பேக் கார்..!!

Written By:

பிரிட்டனின் எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் நிர்வாகிக்க உள்ள சீனாவின் சாய்க் (SAIC) வாகன தயாரிப்பு நிறுவனம் 2019ம் ஆண்டில் நமது நாட்டில் கால் பதிக்கவுள்ளது.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

அதில் முதற்கட்டமாக எம்.ஜி 3 என்ற பெயரில் புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் சாய்க் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

எம்.ஜி 3 கார், இந்தியாவில் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, வோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற ஹேட்ச்பேக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையவுள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

ஏற்கனவே இந்தியாவில் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு மிகப்பெரிய போட்டியான சூழ்நிலை நிலவுகிறது.

தற்போது இதை பயன்படுத்தி எம்ஜி3 களமிறங்கினால் அது மேலும் போட்டியை உருவாக்கும்.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

எம்.ஜி மோட்டார்ஸ், எம்.ஜி 3 ஹேட்ச்பேக் மாடல் காரை இந்தியாவில் தான் தயாரிக்க எண்ணியுள்ளது.

அதற்கான வடிவமைப்பு பணிகள் அனைத்தும் ஐரோப்பாவில் உள்ள அந்நிறுவனத்தின் மற்றொரு மையத்தில் உருவாக்கப்படும்.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

இந்தியாவை விட்டு வெளியேறிய ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலை குஜராத்தில் உள்ளது. அங்கு தான் சாயிக் தனக்கான கார்களை தயாரிக்கிறது.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

இந்தியாவை விட்டு வெளியேறிய ஜெனரல் மோட்டார்ஸின் தொழிற்சாலை குஜராத்தில் உள்ளது. அங்கு தான் சாய்க் எம்.ஜி மோட்டார்ஸின் கார்களை தயாரிக்கிறது.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

எம்.ஜி3 ஹேட்ச்பேக் காரின் முகப்பு பகுதியில் கூர்மையான முகப்பு விளக்குகள், எல்-வடிவத்திலான எல்.இ.டி விளக்குகள் உள்ளன. இது பகல் நேரத்திலும் எரியும் திறன் பெற்றவை.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

மேலும் அதிகளவில் காற்றை உள்ளிழுக்கும் திறனுடன், அதற்கேற்ற வடிவத்துடன் எம்.ஜி 3 காரை சாய்க் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

காரின் பக்கவாட்டில் , மிதக்கும் ரூஃப் அமைப்பு மற்றும் பிளேக்கெண்டு ஏ மற்று பி பில்லர்ஸ் இருக்கும். காரின் பின் பகுதியில் செங்குத்தான டெயில் விளக்குகள், ரூஃப் ஸ்பாய்லர் இடம்பெற்றிருக்கும்.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

16 இஞ்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் காரின் டாப் ரேஞ்ச் மாடல்களில் ஓ.ஆர்.வி.எம் இண்டிக்கேட்டர்கள் எம்.ஜி 3 ஹேட்ச்பேக் மாடலில் இடம்பெற்றிருக்கும்.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

காரின் உள்கட்டமைப்புகள் பெரும்பாலும் சாதரண நிலையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. இருந்தாலும் போட்டியை உணர்ந்து அதற்கேற்று எம்.ஜி 3 கார் வடிவமைக்கப்படும்.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

எஞ்சினுக்கான தேவைகளில் 1.5 பெட்ரோலில் இயங்கும் எஞ்சின் இந்த காரில் பொருத்தப்படவுள்ளது. இதன்மூலம் 104 பிஎச்பி பவர் மற்றும் 137 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

எம்.ஜி மோட்டார்ஸின் முத்திரையுடன் சாய்க் இந்தியாவில் களமிறங்குவது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று தான்.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

மேலும் இந்தியாவில் ஹேட்ச்பேக் மாடல் வரவேற்பு பெற்று வரும் நிலையில் அதே தோற்றத்தில் சாய்க் தனது முதல் தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்து வைக்கிறது.

2019ல் இந்தியாவில் கால்பதிக்கும் சாய்க் & எம்.ஜி கூட்டணி..!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த எம்.ஜி மோட்டார் இந்தியாவில் மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் வோக்வேகன் நிறுவனங்களுக்கு போட்டியாக அமையவுள்ளது.

English summary
Read in Tamil: MG Motors’ Premium Hatchback To Rival Maruti Baleno And Hyundai Elite i20 In India. Click for Details...
Story first published: Thursday, August 10, 2017, 11:25 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark