ஜிஎஸ்டி எதிரொலியால் மிட்சுபிஷி பஜோரோ ஸ்போர்ட் எஸ்.யூ.வி கார் ரூ.1 லட்சம் வரை விலை குறைந்தது ..!!

Written By:

ஜிஎஸ்டிக்கு பிறகு இந்தியாவில் எஸ்.யூ.வி கார்களின் விலை குறைந்து விற்பனை ஆகி வருகிறது. இதில் பிரபல மாடல் கார் ஒன்று ரூ.1.04 லட்சம் வரை குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

மிட்சுபிஷி நிறுவனத்தின் பஜோரோ ஸ்போர்ட் கார் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை குறைந்துள்ளது. கமபீர தோற்றம் மற்றும் செயல்திறனை கொண்டுள்ள இந்த கார் ஆஃப்-ரோடுக்கான மாடலாகவும் உள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

அதற்கு காரணம் மிட்சுபிஷி பஜோரோ காரை பராமரிக்க அதிக செலவு என்பதால் இந்தியாவில் இதற்கு பெரிய விற்பனை திறன் இல்லை.

Recommended Video - Watch Now!
2017 Kawasaki Ninja 1000 Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

இருந்தாலும், இதை வாங்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதற்கான வாய்ப்பாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

ஜிஎஸ்டி படி இந்தியாவில் மிட்சுபிஷி பஜோரா ஸ்போர்ட் மாடலின் விலை சுமார் ரூ.1.04 லட்சம் வரை குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

இந்தியாவில் ஆரம்ப நிலையில் ரூ. 26.4 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்) மதிப்பில் துவங்கும் மிட்சுபிஷி பஜோரோ மும்பை போன்ற பெருநகரங்களில் மேலும் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

2015ம் ஆண்டில் அறிமுகமான இந்த கார் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபேர்டு என்டெவர், இசுசூ எம்.யூ.- எக்ஸ் மற்றும் வோக்ஸ்வேகன் டியூகன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

எஸ்.யூ.விக்கான தளமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை மாறிய பிறகு, பல அதிகப்படியான அப்கிரேடுகளுடன் பஜேரோ ஸ்போர்ட் பிளஸ் எடிஷன் வெளியிடப்பட்டது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

பகிலில் எரியும் எல்.இ.டி விளக்குகள், பிளாக் நிறத்திலான பம்பர், கிரில் மற்றும் வீல் ஆர்ச் கிளௌவ்டிங் போன்ற அம்சங்கள் இந்த புதிய மாடலில் இடம்பெற்றுள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

17- அங்குல அலாய் சக்கரங்கள், கருப்பு நிறத்திலான ரூஃப் டெயில், லெதர் ஸ்ட்ராப் செய்யப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃப் பிளேட் போன்ற அம்சங்களும் புதிய பஜோரோ ஸ்போர்ட் எடிஷனில் உள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

மேலும் குரூஸ் கண்ட்ரோல், டிவிடி பிளேயர்கள் மற்றும் 6-ஸ்பீக்கர் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற கட்டமைப்புகளும் இதில் உள்ளது.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்.யூ.வி காரில் 2.5 லிட்டர் 16 வால்வ் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் உள்ளது. இது 176 பிஎச்பி பவர் மற்றும் 350 என்.எம் திறனை வெளிப்படுத்தும்.

ஜிஎஸ்டி: ரூ.1 லட்சம் வரை விலை குறைந்த மிட்சுபிஷி பஜோரோ..!!

4-வீல் டிரைவ் கொண்ட திறனுடன் 4X4 வேரியன்ட் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆகியவற்றை மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்.யூ.வி கார் கொண்டுள்ளது.

English summary
Read in Tamil: Mitsubishi has announced a significant drop in price for its Pajero Sport SUV. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark