விரைவில் அமலாகும் மோட்டார் வாகன திருத்த மசோதோ... நிறைவேற்றும் முனைப்பில் நிதின் கட்கரி..!!

Written By:

மோட்டார் வாகன திருத்த மசோதா மேல்-சபை தேர்வுக்கு குழுவிற்கு அனுப்பப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

மோட்டார் வாகன சட்டம் 1988-ல், போக்குவரத்து விதிகளை பின்பற்றாதவர்கள் மீது அபராத அளவு அதிகரிப்பு, விபத்தில் காயமடைபவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

2016ல் இந்த சீர்திருந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது இது மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

கடந்த சில நாட்களுக்கு முன் மேல்-சபை துணைத்தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு மோட்டார் வாகன திருத்த மசோதோ குறித்து அனைத்து கட்சித்தலைவர்களும் விவாதித்தனர்.

Recommended Video
Tata Nexon Review: Specs
மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

அப்போது இருந்த எதிர்கட்சிகள் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடையவுள்ளதால், மீண்டும் மோட்டார் வாகன திருத்த மசோதாவை ஒருமுறை படிக்க கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை விடுத்தன.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மோட்டார் வாகன விதிகளை பின்பற்றி தான் புதிய சட்ட திருத்தம் 1988 இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் அமையவுள்ளது.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

இருந்தாலும், ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கும் உரிமை மத்திய அரசுடமை ஆக்கப்படுமோ என பல மாநில அரசுகள் சந்தேகிக்கின்றன.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

இதுகுறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "ஓட்டுநர் உரிமம், அபாரதம் செலுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் மாநில அரசின் உரிமை தான்.

மேலும் மத்திய அரசுக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளி அமைக்கும் எண்ணம் இல்லை. தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கான அனுமதியும் மாநில அரசின் உரிமையின் கீழ் தான் வரும்" என தெரிவித்தார்.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

பி.ஜே. குரியன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்கட்சிகளின் கோரிக்கையை அடுத்து மசோதா மேல்-சபையின் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

இதன்படி புதியதாக அமையும் தேர்வுக்குழுவினர், புதிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் அறிக்கை அளிப்பார்கள்.

மேல் சபைக்கு செல்லும் மோட்டார் வாகன திருத்த மசோதா..!!

பிறகு, குளிர்கால கூட்டத்தொடரில் புதிய மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்படும். இதை எதிர்கட்சியினர் உட்பட அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

English summary
Read in Tamil: Motor Vehicles Bill Decided to sent to Legislative Assembly Says Nithin Gadkari. Click for Details...
Story first published: Wednesday, August 9, 2017, 13:12 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos