டீசல் கார்களுக்கு குட்பை சொல்லும் முனைப்பில் பி.எம்.டபுள்யூ நிறுவனம்..!!

Written By:

ஜெர்மன் நாட்டில் உள்ள மியுனிக் நகரம் பிரபல பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் தாய் வீடாகும். தற்போது இங்கு நைட்ரஜன் ஆக்ஸைடு அளவு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அதிகரித்துள்ளது.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

இதனால் அந்த நகரத்தின் மேயர் சூட்வீஷ்செ ஸீய்டுங் மியுனிக்கில் டீசல் கார்களின் பயன்பாட்டை தடை செய்யும் ஆலோசனையில் உள்ளார்.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

தற்போது பல ஐரோப்பிய நாடுகள் வாகனங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்ஸைடு அளவை குறித்து கவலை கொள்ள துவங்கியுள்ளன.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

இதற்கு காரணம் வோக்ஸ்வேகனின் மாசு உமிழ்வு மோசடி. அமெரிக்காவில் மாசு உமிழ்வு செய்ததாக வசமாக மாட்டிக்கொண்ட வோக்ஸ்வேகன் மீது பல புகார்களை அமெரிக்க தெரிவித்தது.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

அடுக்கடுக்காக எழுந்த புகாரால் பல ஐரோப்பிய நாடுகள், வாகனப்புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய தொடங்கின.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

அவ்வாறு பி.எம்.டபுள்யூவின் சொந்த ஊரான மியுனிக்கில் ஆராய்ந்த பார்த்த போது, நைட்ரஸ் ஆக்ஸைடு அளவு அங்கு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ள மியுனிக்கின் நகர மேயர் சூட்வீஷ்செ ஸீய்டுங், நைட்ரஸ் ஆக்சைட்டின் அளவு மியுனிக்கில் அச்சுறுத்தும் அளவில் உள்ளதாக அறிவித்துள்ளார்.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

இதன் காரணமாக மியுனிக் உட்பட ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் டீசல் வாகனங்களின் பயன்பாடு தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

டீசல் வாகனங்களுக்கான விதி அமலுக்கு வந்தால், ஜெர்மனியில் கிட்டத்தட்ட 1,33,000 முதல் 1,70,000 டீசல் வாகனங்கள் பயனற்று போக்கும்.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

இந்த தடை அமலுக்கு வந்த பிறகு இனி யூரோ 6 மாசு விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய வாகனங்களை மட்டுமே ஜெர்மனியில் ஓட்ட அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு தடை விதிப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் தடை அமலுக்கு வரும் போது அதனால் பயனாளிகள் பாதிக்கப்படாதவாறான சூழல் வேண்டும்.

தாய்நாட்டில் தடை பெறும் நிலையில் பிஎம்டபுள்யூ டீசல் கார்கள்!

நமது நன்மைக்காக நடைமுறைக்கு வரும் இந்த தடையால் யாரும் பாதிக்கப்படதாவாறு அமல்படுத்தினால், மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது விழிப்புணர்வு உருவாகும்.

English summary
BMW’s Hometown, Munich Considering Banning Diesel Vehicles. Click For Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark