கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் பெயரில் புதிய டாடா நானோ எலக்ட்ரிக் கார் வெளிவர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

By Saravana Rajan

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்கள் உருவாக்கத்தில் கோவையை சேர்ந்த ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சூழலில் முதல்முறையாக டாடா நானோ காரின் மின்சார மாடல் ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் பெயரில் வர இருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

வரும் 28ந் தேதி டாடா நானோ எலக்ட்ரிக் கார்கள் டெல்லியில் பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஓலா வாடகை கார் நிறுவனத்திற்காக 400 டாடா நானோ எலக்ட்ரிக் கார்களை பிரதமர் மோடி சேவைக்கு அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

இந்த சூழலில் டாடா நானோ எலக்ட்ரிக் கார் குறித்து விசேஷ தகவல்களை ஆட்டோகார் இந்தியா தளம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, நானோ எலக்ட்ரிக் கார் டாடா பிராண்டில் வெளிவரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

இந்த கார் டாடா மோட்டார்ஸ் கூட்டணி நிறுவனமாக செயல்பட்டு வரும் கோவை ஜெயம் நிறுவனத்தின் பெயரில் வெளி வர இருக்கிறது. ஜெயெம் நியோ என்ற பெயரில்தான் டாடா நானோ காரின் மின்சார மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எஞ்சின் இல்லாத நானோ காரின் உடல்கூடு பாகங்களை வழங்கும். அதனை ஜெயெம் நிறுவனம் மின்மோட்டார் மற்றும் பேட்டரி, ட்ரான்மிஷன் பாகங்களை பொருத்தி தனது பிராண்டில் மின்சார மாடலாக விற்பனை செய்ய இருக்கிறது.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

டாடா நானோ எலக்ட்ரிக் காருக்கான பவர்ட்ரெயின் என்று சொல்லப்படும் ட்ரான்மிஷன், மின்மோட்டார் மற்றும் சார்ஜிங் கட்டமைப்புகளுக்கான பாகங்களை மின்சார வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் எலக்ட்ரா இவி என்ற நிறுவனம் ஜெயெம் நிறுவனத்திற்கு வழங்க இருக்கிறது.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

டாடா நானோ எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட இருக்கும் மின் மோட்டார் 23 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் சான்றளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், நடைமுறையில் 140 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

இந்த தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மாடல் வாடகை கார் நிறுவனங்களுக்காக வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் ஓலா வாடகை கார் நிறுவனத்திற்கு வழங்கப்பட இருக்கும் 400 நானோ எலக்ட்ரிக் கார்களில் டாடா பேட்ஜ் இருக்காது. ஜெயெம் பிராண்டில் வருவதோடு, எலக்ட்ரா இவி நிறுவனத்தின் பேட்ஜ் பதிக்கப்பட்டிருக்கும்.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

அதேநேரத்தில், தனி நபர் மார்க்கெட்டுக்கான டாடா நானோ எலக்ட்ரிக் கார் டாடா மோட்டார்ஸ் பிராண்டில் வெளிவர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நானோ எலக்ட்ரிக் மாடல்கள் அதிக சக்திவாய்ந்த மின் மோட்டார் மற்றும் பேட்டரியுடன் வருவதாகவும் கூறப்படுகிறது.

கோவை ஜெயெம் பிராண்டில் வருகிறது நானோ எலக்ட்ரிக் கார்... பரபரப்பு!

காற்று மாசு காரணமாக மூச்சுத் திணறி வரும் டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு இப்போது மின்சார கார்கள் அவசியமாகி இருக்கிறது. ஓலா வாடகை கார் நிறுவனத்தின் முயற்சி வரவேற்கப்பட வேண்டியதாகவே கருதப்படுகிறது.

Article Published On: Thursday, November 23, 2017, 11:10 [IST]
English summary
According to reports that Prime Minister Narendra Modi will unveil a fleet of 400 Tata Nano electric cars in Delhi on November 28, 2017. Cab aggregator Ola will produce the Nano electric cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+