2018 மார்ச்-ஏப்ரலில் மின்சார கார் பயன்பாட்டை வரவேற்க தயாராகும் டெல்லி..!!

2018 மார்ச்-ஏப்ரலில் மின்சார கார் பயன்பாட்டை வரவேற்க தயாராகும் டெல்லி..!!

By Azhagar

2030-ம் ஆண்டிற்குள் அனைத்து பயனாளிகளும் மின்சார வாகனங்கள் பயன்படுத்த அரசின் முடிவுக்கு ஏதுவாக மேலும் 10,000 மின்சார கார்களை வாங்க மத்திய அரசின் கீழ் இயங்கும் EESL நிறுவனம் ஒப்பந்தம் செய்யவுள்ளது.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

இந்தியாவில் தலைநகரமான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

இதற்காக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் தயாரித்துள்ள 10,000 மின்சார கார்களை வாங்க முதற்கட்டமாக மத்திய அரசின் EESL நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

கடந்த மாதம் இறுதிசெய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய EESL நிறுவன நிர்வாக இயக்குநர் சௌரப் குமார்,

"மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பை உருவாக்க தொடர்ந்து நாங்கள் முயல்வோம். இதற்காக அரசும் பல முன்னேற்பாடுகளை செய்ய திட்டமிட்டு வருகிறது" என்று கூறினார்.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

இதுதவிர மின்சார ஆற்றல் பெற்ற கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகளை வாங்க EESL நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

மின்சார பேருந்திற்கான தேவை ஏற்படும் போது, அதற்கான திட்டங்களுடன் செயல்படுத்தப்படும்.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

5 முதல் 10 நிமிடங்களுக்குள் வாகன பேட்டரிகளை சார்ஜ் செய்யும் திறனுடன் சார்ஜிங் நிலையங்களை அமைக்க டெல்லி அரசு யோசித்தது.ஆனால் அதற்கான செலவீனங்கள் மிகவும் அதிகம்.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

இதன் காரணமாக ஏசி மற்றும் டிசி மின்சார மோட்டார்களுக்கு ஏற்றவாறு சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

Recommended Video

[Malayalam] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

டிசி பேட்டரி சார்ஜர்கள் முழுவதும் சார்ஜாக 45 முதல் 60 நிமிடங்கள் வரை நேரமாகும். அதேபோல ஏசி சார்ஜர்கள் முழுவதும் சார்ஜாக 6 முதல் 7 மணி நேரமாகும்.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

டெல்லி அரசு ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தத்தின் படி 10,000 மின்சார கார்கள் 2018 மார்ச் - ஏப்ரல் மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் மின்சார கார் பயன்பாட்டை அதிகரிக்க புதிய ஒப்பந்தம்..!!

தற்போது புதியதாக மேலும் 10 கார்களுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தமும், அதே மாத இடைவெளிகளில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: New 10,000 Electric Cars tender In March Or April Says EESL. Click for Details...
Story first published: Thursday, November 16, 2017, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X