”டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களே அதிக ஆபத்தை விளைவிக்கிறது” ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

”டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களே அதிக ஆபத்தை விளைவிக்கிறது” ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

By Azhagar

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தற்போதைய டீசல் கார்கள், பெட்ரோலில் இயங்கும் கார்களை காட்டிலும் சிறந்தவை என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு கூறப்பட்டுள்ளது.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஃபேட்ரிக் ஹாயெஸ் "பெட்ரோல் இருந்து வெளியேறும் மாசுகுறைபாடு கண்களுக்கு தெரியாதவை, அதனாலே டீசலினால் இயங்கும் வாகனங்கள் விமர்சிக்கப்படுகிறது" என்கிறார்.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

முதன்மை மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள கரிம ஏரோசோலை உள்ளடக்கிய கார்பேனியசஸ் துகள் பொருள் டீசல் எஞ்சினுக்கான புகை போக்கி குழாய்களிலிருந்து வெளியேறுகின்றன.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

பிராணவாயுவின் துகள் பொருள்களை அழிக்க வல்லமை பெற்ற இந்த வாயுவால் மனிதர்களின் நுரையீரல் பாதிக்கப்படும். இதனை தடுக்க மிக கடினமான ஃபில்டர்கள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பகுதிகளில் உள்ள டீசல் வாகனங்களில் அமைக்கப்படுகின்றன.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

ஃபில்டர்களின் தன்மை குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அது டீசலிலிருந்து வெளியேறும் கார்பேனியசஸ் துகள் பொருட்களை போதிய அளவு கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

மேலும் 22 டிகிரி தட்பவெட்பம் நிலவக்கூடிய பகுதிகளில் பெட்ரோல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, டீசல் வாகனங்களை விட 10 மடங்கும் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர்.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

மேலும் மைனஸ் 7 டிகிரியில் இருக்கும் தட்பவெட்ப பகுதிகளில் கார்பேனிசியஸ் துகள் பொருட்களின் தாக்கம் வழக்கத்தை விட 62 சதவீதம் அதிகளவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

குளிர்ந்த பகுதிகளில் நச்சு வாயுவின் அளவு அதிகரிக்க காரணம் கோல்டு-ஸ்ராட்டு என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

எஞ்சினின் இதமான சூட்டை அடையும் வரையில் கேட்டலிட்டிக் கன்வெர்டரில் மாறுபாடு இருக்காது. இதனாலேயே குளிர்ந்த பகுதிகளில் எஞ்சினின் இயங்கும் திறனில் பிரச்சனை நிலவுகிறது.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

மேலும் அமில மழை மற்றும் பனி மூட்டம் அதிகரிப்பிற்கு காரணம் பழைய ரக டீசல் வாகனங்களே என்பதையும் இந்த ஆராய்ச்சியின் முடிவு உறுதிசெய்கிறது.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு காரணம் டீசல் ரக வாகனங்கள் தான் என்ற கருத்தை மாற்றுவதற்கான பல கருத்துகளை இந்த ஆய்வு முன்வைக்கிறது.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

பழைய மாடல் டீசல் எஞ்சின்களை விட தற்போதைய காலகட்டத்தில் வெளிவரும் டீசல் எஞ்சின்கள் பல மேம்படுத்தப்பட்டவை.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

இருந்தாலும் குறைந்தளவிலான பராமரிப்பு காரணமாக வாடிக்கையாளர்கள் பெட்ரோல் ரக வாகனங்களைத்தான் விரும்பி வாங்குகின்றனர்.

”டீசல் கார்களால் ஆபத்து இல்லை...” அப்படியா..??

ஆனால் டீசல் கார்களின் தற்போதைய நிலையை குறித்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, டீசல் கார் விற்பனையை உலகளவில் ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: New diesel vehicles produce less pollution as opposed to the petrol vehicles. Says a Report. Click for Details...
Story first published: Monday, July 17, 2017, 15:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X