புதிய தலைமுறை மாருதி டிசையர் காரில் எதிர்பார்க்கப்படும் அட்டகாசமான புதிய விஷயங்கள்!

Written By:

புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

01. புரொஜெக்டர் ஹெட்லைட்

01. புரொஜெக்டர் ஹெட்லைட்

காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில் டாடா ஸெஸ்ட் கார் மற்றும் நாளை அறிமுகமாக இருக்கும் டாடா டீகோர் கார்களுக்கு அடுத்து புரொஜெக்டர் ஹெட்லைட்டுகளுடன் விற்பனைக்கு வருகிறது புதிய மாருதி டிசையர் கார். அத்துடன், பகல்நேர ரன்னிங் விளக்குகளும் இடம்பெறுகிறது.

02. இடவசதி

02. இடவசதி

மாருதி டிசையர் காரின் மிகப்பெரும் குறை, பின் இருக்கை இடவசதி மிக நெருக்கடியாக இருப்பதே. இந்த குறையை களைந்து தற்போது சற்று கூடுதல் இடவசதியுடன் புதிய மாருதி டிசையர் கார் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

03. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

03. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

புதிய தலைமுறை மாருதி டிசையர் காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். மாருதி பெலினோ கார் போன்றே, ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய சாஃப்ட்வேர்களை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

04. பூட் ரூம் இடவசதி

04. பூட் ரூம் இடவசதி

தற்போதைய மாடலில் 316 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இருக்கிறது. புதிய மாருதி டிசையர் காரில் அதிக கொள்திறன் கொண்டதாக பூட்ரூம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருக்கையின் தடிமனை குறைத்து, கேபின் இடவசதி மற்றும் பூட்ரூம் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.

05. கூல்டு க்ளவ் பாக்ஸ்

05. கூல்டு க்ளவ் பாக்ஸ்

புதிய தலைமுறை மாருதி டிசையர் காரில் கூல்டு க்ளவ்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். குளிர்பானங்களை இந்த க்ளவ்பாக்ஸில் வைத்து ஜில்லென பருகலாம். முதல்முறையாக காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில் இந்த வசதியுடன் டிசையர் வருகிறது.

06. ஹைப்ரிட் மாடல்

06. ஹைப்ரிட் மாடல்

மாருதி எர்டிகா, மாருதி சியாஸ் கார்களில் இருக்கும் எஸ்விஎச்எஸ் என்ற மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் புதிய தலைமுறை மாருதி டிசையர் காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் மைலேஜிற்கு இந்த சிஸ்டம் வழிவகுக்கும் என்பதுடன், வெளியேறும் புகையின் அளவு குறையும்.

07. பாதுகாப்பு வசதிகள்

07. பாதுகாப்பு வசதிகள்

புதிய மாருதி டிசையர் காரில் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 08. பெயரில் சிறு மாற்றம்

08. பெயரில் சிறு மாற்றம்

தற்போது மாருதி ஸ்விஃப்ட் டிசையர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால், புதிய மாடலில் ஸ்விஃப்ட் தவிர்க்கப்பட்டு, மாருதி டிசையர் என்ற பெயரில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

09. எதிர்பார்க்கும் விலை

09. எதிர்பார்க்கும் விலை

புதிய மாருதி டிசையர் கார் ரூ.5.70 லட்சம் முதல் ரூ.7.10 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலைவிட ரூ.50,000 முதல் ரூ.70,000 வரையிலான கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

10. அறிமுகம் எப்போது?

10. அறிமுகம் எப்போது?

வரும் மே மாதம் புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் இணைந்திருங்கள்.

English summary
Read in Tamil: Indian auto maker Maruti Suzuki will launch the next-gen Swift Dzire in the Indian market. Here are the some features of the subcompact sedan you should know. Read in Tamil.
Story first published: Tuesday, March 28, 2017, 9:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark