புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் முக்கிய சிறப்பம்சங்கள்!

புதுப்பொலிவுடன் வரும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல்களால் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடிகளை போக்கிக் கொள்ளும் விதமாக, ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுத்து களமிறக்க உள்ளது ஃபோர்டு கார் நிறுவனம். இந்த காரில் இருக்கும் 4 முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சில முக்கிய சிறப்பம்சங்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் மூலமாக கூடுதல் வசீகரத்துடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் 4 புதிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ஏற்கனவே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு மாற்றாக, புத்தம் புதிய 1.5 லிட்டர் டிராகன் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வர இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சில முக்கிய சிறப்பம்சங்கள்

ஏற்கனவே பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் நிலையில், இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். பவர், டார்க் திறன் மட்டுமல்ல, 7 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தர வல்லது.

Recommended Video

[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
 புதிய கியர்பாக்ஸ்

புதிய கியர்பாக்ஸ்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் டியூவல் க்ளட்ச் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் விற்பனைக்கு கிடைத்து வந்தது. இந்த நிலையில், புதிய பெட்ரோல் எஞ்சினும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கும். ஆனால், டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸுக்கு பதிலாக, பழைய நுட்பத்திலான 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

புதிய சக்கரங்கள்

புதிய சக்கரங்கள்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி 16 அங்குல சக்கரங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய மாடல் 17 அங்குல அலாய் சக்கரங்களுடன் வர இருக்கிறது. இதனால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் கம்பீரம் இன்னும் கூடுதலாகி இருக்கிறது.

Trending On DriveSpark Tamil:

புதிய பாதுகாப்பு வசதி

புதிய பாதுகாப்பு வசதி

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. எந்த நேரத்திலும் டயர்களில் இருக்கும் காற்றழுத்ததை தெரிந்து கொள்ளவும், காற்றழுத்தம் குறைவதை உடனடியாக ஓட்டுனருக்கு எச்சரிக்கையும் வசதியையும் வழங்கும். இந்த வசதி டைட்டானியம் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

இடவசதி

இடவசதி

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் பின் இருக்கை அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால், பின் இருக்கை உயர்தப்பட்ட இருக்கை அமைப்பையும், அதிக இடவசதியையும் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் பின் இருக்கை போதிய இடவசதியுடன் இருப்பதால், வாடிக்கையாளர்கள் மனதில் முக்கிய விஷயமாக பதிந்தது. எனவே, நெருக்கடியான பின் இருக்கையை சற்று இடவசதியுடன் மேம்படுத்தி இருக்கிறது ஃபோர்டு.

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் சில முக்கிய சிறப்பம்சங்கள்

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் எஸ்யூவிகளால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்கு ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு இந்த புதுப்பொலிவு அவசியம்தான். இந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியை கோவாவில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்து இருக்கிறோம். விரைவில் இந்த எஸ்யூவியின் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் மற்றும் வீடியோவையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2017, 10:18 [IST]
English summary
Let us find out what Ford has to offer in the facelifted EcoSport to take on its rivals.
மேலும்... #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+