புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் எப்போது?- புதிய தகவல்கள்!

Written By:

ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியாவில் முகவரி ஏற்படுத்தி கொடுத்த மாடல் சான்ட்ரோ. வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த சான்ட்ரோ கார் நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்து வந்ததையடுத்து, அந்த காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

 புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் எப்போது?- புதிய தகவல்கள்!

இந்த நிலையில், இந்த காருக்கு மாற்றாக புதிய கார் களமிறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், சான்ட்ரோ கார் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பும் வகையில், புத்தம் புதிய கார் மாடலை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருவது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தோம்.

 புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் எப்போது?- புதிய தகவல்கள்!

இதனை உறுதிபடுத்தும் விதத்தில், அடுத்த ஆண்டு பிற்பாதியில் புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ தெரிவித்துள்ளார். இந்த புதிய ஹேட்ச்பேக் கார் சான்ட்ரோ காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் எப்போது?- புதிய தகவல்கள்!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் காரில் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஎஞ்சின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. புதிய காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் வருவதை அவர் உறுதி செய்துள்ளார். மேலும், இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் ஹூண்டாய் சொந்தமாகவே உருவாக்கி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

 புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் எப்போது?- புதிய தகவல்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். தவிர்த்து, புளூயிடிக் டிசைன் தாத்பரியங்களுடன் நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

 புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் அறிமுகம் எப்போது?- புதிய தகவல்கள்!

ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் புதிய ஹேட்ச்பேக் காரை ஹூண்டாய் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் டாடா டியாகோ, மாருதி செலிரியோ, ரெனோ க்விட் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். குறிப்பாக, பட்ஜெட் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
New Gen Hyundai Santro To Arrive In India 2018
Story first published: Thursday, August 24, 2017, 10:42 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos