புதிய மாருதி ஸ்விப்ட் கார் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகம்

ஜெனிவாவில் நடந்து வரும் மோட்டார் கண்காட்சியில் புதிய ஸ்விப்ட் காரை அறிமுகப்படுத்தியது மாருதிசுசுகி நிறுவனம். அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

மாருதிசுசுகி ஸ்விப்ட் காரின் புதிய தலைமுறை மாடலின் அறிமுகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் துவங்கியுள்ள 87வது மோட்டார் வாகன கண்காட்சியில் அரங்கேறியது. இந்திய மக்களின் நம்பகத்தன்மை வாய்ந்த கார்களில் முக்கிய இடத்தில் ஸ்விப்ட் கார்கள் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

மாருதிசுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார்கள் இந்தியாவில் சிறந்த பிரிமியம் ஹேட்ச்பேக் காராக திகழ்ந்து வருகிறது. டிசைன், மைலேஜ், திறன், சொகுசு, பாதுகாப்பு, டிரைவிங், குறைந்த விலையிலான பராமரிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்குவதால் ஸ்விப்ட் கார்களை இந்தியர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

இந்தியாவில் மூன்றாம் தலைமுறை ஸ்விப்ட் கார்களே விற்பனையில் இருந்து வருகின்றன. 2015ஆம் ஆண்டு இவை முதல் முறையாக இங்கு அறிமுகமாகின. சர்வதேச சந்தையில் ஜப்பானில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தலைமுறை ஸ்விப்ட் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

தற்போதுள்ள ஸ்விப்ட் கார்களை விடவும் எடை குறைவாகவும், அதிக திறனுடனும், அதிக பாதுகாப்பு வாய்ந்ததாகவும் புதிய ஸ்விப்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகள்படியும் இந்த ஸ்விப்ட் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

முற்றிலும் புதிய தோற்றத்தில், கவரக்கூடிய வகையில் இதன் டிசைன் அமைந்துள்ளது. ஸ்லீக்கான ஹெட்லைட்டுகள், எல்ஈடி இண்டிகேட்டருடன் கூடிய ரியர்வியூ கண்ணாடிகள் மற்றும் ஃபிலோட்டிங் ரூஃப் உடன் புதிய ஸ்விப்ட் வருகிறது.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

பின்புறத்தில் எல்ஈடி விளக்குகள், டயமண்ட் கட் அலாய் வீல்கள் என மிகவும் ட்ரெண்டியான ஸ்போர்ட்ஸ் தோற்றத்தில் வடிவமைப்பு பெற்றுள்ளது புதிய ஸ்விப்ட் கார்.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

டிவின் பாட் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ சப்போர்டட் டச் ஸ்கிரீன் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இரண்டு ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு சிறம்பம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

புதிய ஸ்விப்டில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின், 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ என இரண்டு பெட்ரோல் இஞ்சின் வேரியண்டுகளும், 4 சிலிண்டர்கள் கொண்ட 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இஞ்சினும் கொண்ட டீசல் வேரியண்ட்டும் உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய மாருதி ஸ்விப்ட் கார்

தற்போது சர்வதேச மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் கண்டுள்ளதால், இந்த நான்காம் தலைமுறை ஸ்விப்ட் கார்கள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம். இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் புதிய ஸ்விப்ட் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 2017 மாருதிசுசுகி ஸ்விப்ட் காரின் படங்க கீழே உள்ள கேலரியில் காணலாம்:

Most Read Articles
English summary
2017 Maruti Suzuki Swift unveiled at Geneva Motor Show
Story first published: Tuesday, March 7, 2017, 18:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X