சென்னையில் தயாராகும் 2017 வெர்னா கார்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் மவுசு..!!

சென்னையில் தயாராகும் 2017 வெர்னா கார்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரிக்கும் மவுசு..!!

By Azhagar

சுமார் 10,501 புதிய வெர்னா கார்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை ஹூண்டாயின் இந்தியக்கிளை கைப்பற்றியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

நடுத்தர செடான் மாடல் கார்களில் பிரபலமான கார் ஹூண்டாய் வெர்னா. 2017ல் வெளியான மேம்படுத்தப்பட்ட வெர்னா மாடலில், அழகியல் சார்ந்த மாற்றங்களை பெற்றிருந்த அதனுடைய முகப்பு பகுதி நல்ல வரவேற்பை பெற்றது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

இந்த புதிய தோற்றத்தில் வெர்னா காரை பார்க்கும்போது ஹூண்டாயின் மற்ற தயாரிப்பான பெரிய அளவு செடான் எலென்ட்ரா மாடல் நினைவுக்கு வருவதாக சில ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

இருந்தாலும் 2017 வெர்னா கார் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக வெளியான நாள் முதல் இதற்கு இந்தியாவில் புக்கிங் குவிந்து வருகின்றன.

தற்போது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றவாறு சுமார் 10,501 புதிய மாடல் வெர்னா கார்களை தயாரிக்கும் ஆர்டரை ஹூண்டாய் இந்தியா கைப்பற்றியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் ஹூண்டாய் வெர்னா மாடல் கார் ஏக்சென்ட் என்ற பெயரில் தான் அறியப்படுகிறது.

மேலும் இதுவரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட செடான் கார்களில் இதுதான் ஹூண்டாய்க்கு அடித்திருக்கும் பெரிய ஜாக்பாட்.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இன்னும் பல ஆசிய நாடுகளில் ஹூண்டாய் மொத்தம் 33 விநியோகஸ்தர்களை கார் விற்பனைக்காக அழைத்திருக்கிறது.

Recommended Video

[Tamil] Tata Nexon Review: Specs
மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

அதன்படி சென்னையில் தயாராகும் ஹூண்டாய் கார்களை இந்த மேற்கூறிய நாடுகளுக்கு விநியோகஸ்தர்கள் மூலம் அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

இவைத்தவிர தென் ஆஃப்ரிக்கா நாடுகளுக்கும் புதிய வெர்னா மாடல் காரை ஹூண்டாய் விற்பனை செய்யவுள்ளது. இது 2018 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

வெளிநாடுகள் என்றில்லை, உள்நாட்டிலும் அசாத்திய விற்பனை திறனை 5வது தலைமுறைக்கான வெர்னா கார் பெற்றுள்ளது.

புதிய வெர்னா மாடல் வெளியான நாள் முதல் இந்தியளவில் சுமார் 18,600 புக்கிங்கள் குவிந்து வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய வெர்னா மாடல் காரில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் உள்ளது.

இதன் மூலம் எஞ்சின் தேவைகளுக்கு ஏற்றவாறு 121 பிஎச்பி மற்றும் 126 பிஎச்பி பவர் அதிகப்பட்சமாக கிடைக்கும்.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

மேலும் வேரியன்டுகளுக்கு தகுந்தவாறு, வெர்னா காரின் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

இதனுடைய விற்பனையை மேலும் இந்தியளவில் அதிகரிக்க ஹூண்டாய் 1.4 லிட்டர் திறன் கொண்ட வெர்னா மாடலை எதிர்காலத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

ஹூண்டாய் இந்தியாவின் தலைமை இயக்குநர் மற்றும் செயல் அதிகாரி ஒய்.கே. க்கூ பேசும்போது,

"ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனைகளில் புதிய வெர்னா காருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இது ஹூண்டாய்க்கு பெரிய மகிழ்ச்சியான செய்தி" என்று கூறினார்.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

பல சர்வதேச நாடுகளின் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுக்கான உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன.

ஆட்டோ துறையில் மட்டுமில்லாமல், இந்தியாவிற்கு இது பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு ரீதியிலும் நல்ல முன்னேற்றத்தை வழங்கும்.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

தற்போதிருக்கும் எண்ணிக்கைகளை விடுத்து மேலும் பல புதிய மாடல் வெர்னா கார்களை ஹூண்டாய் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை வசியம் செய்த 2017 ஹூண்டாய் வெர்னா கார்..!!

இது உற்பத்தி திறனை பெருக்குவதோடு, இந்தியாவில் மேலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியது.

Most Read Articles
English summary
Read in Tamil: Next-Gen Hyundai Verna Bags Record Export Order From The Middle East. Click for Details...
Story first published: Thursday, October 26, 2017, 10:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X