புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக முன்பதிவு கிடைத்துள்ளது. அதன் விபரங்களையும், காரணங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய ஹூண்டாய் வெர்னா கார் முன்பதிவில் அசத்தி வருகிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

கடந்த மாதம் புதிய ஹூண்டாய் வெர்னா கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. வடிவமைப்பு, வசதிகளில் புதிய தலைமுறை மாடலாக வந்த வெர்னா காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 7,000 பேர் புதிய வெர்னா காருக்கு முன்பதிவு செய்துள்ளனர். 70,000 பேர் வரை விசாரணை செய்துள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

வரும் தீபாவளி பண்டிகைக்குள் 10,000 புதிய வெர்னா கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி வழங்கப்பட்டு விடும் வாய்ப்பும் உள்ளது. இதனால், ஹூண்டாய் நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்.கே.கூ கூறுகையில்," 5வது தலைமுறை காருக்கு இந்தியாவில் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. டிசைன் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த மாடலாக இருப்பதே இந்த காருக்கு வலுவான வர்த்தக துவக்கத்தை தந்துள்ளது.

Recommended Video

2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு தலைமுறை மாற்றம் கண்டு வரும் புதிய வெர்னா கார் புதுமையான தொழில்நுட்பத்திலும், வடிமைப்பிலும் இந்த ரகத்தில் முன்னோடியாக விளங்குகிறது. வெர்னா காருக்கு எதிர்பார்த்ததைவிட இருமடங்கு கூடுதல் முன்பதிவு கிடைத்துள்ளது. வெர்னா கார் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான், புதிய ஹூண்டாய் வெர்னா கார் புத்தம் புதிய கே2 சேஸியில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரகத்தில் பல புதுமையான வசதிகளுடன் வந்துள்ளது.

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

இந்த கார் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதேபோன்று, பெட்ரோல், டீசல் மாடல்கள் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு அமோக வரவேற்பு!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வருகை, ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு கடும் போட்டியை தந்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Motor India launched the fifth-generation Verna in India in August 2017 with the intention to put some much-required life into the decreasing sales of its mid-size sedan.
Story first published: Saturday, September 2, 2017, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X