புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

Written By:

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் விற்பனைக்கு வந்துவிட்டது. இதற்காகவே, காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு, வெர்னா காரின் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் வழங்குகிறோம். இது உங்களது தேர்வை எளிதாக்கும் என நம்புகிறோம்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் 121 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனிலும், 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த எஞ்சின் ஆப்ஷன்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்ய முடியும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் E, EX, SX, SX(O) ஆகிய வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் இந்த வேரியண்ட்டுகள் கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா E வேரியண்ட்

புதிய ஹூண்டாய் வெர்னா E வேரியண்ட்

இது புதிய ஹூண்டாய் வெர்னா காரின் அடிப்படை வசதிகள் கொண்ட குறைவான விலை வேரியண்ட். இந்த வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். ஆனால், மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே இந்த வேரியண்ட் கிடைக்கும்.

Recommended Video
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் E வேரியண்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. ஹாலஜன் பல்பு பொருத்தப்பட்ட ஹெட்லைட்டுகள், இரவு நேரத்தில் எதிரொலிப்பை தவிர்க்கும் உட்புற ரியர் வியூ மிரர், சென்ட்ரல் லாக்கிங் வசதி, வீல் கவர், 15 அங்குல சக்கரங்கள், ஃபேப்ரிக் சீட் கவர்கள், பவர் விண்டோஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர்கள், மேனுவல் ஏசி சிஸ்டம், க்ரோம் அலங்காரத்துடன் கூடிய முன்பக்க க்ரில் அமைப்பு, ஸ்டீயரிங் வீலில் ட்ரிப் மீட்டரை ரீசெட் செய்யும் வசதிகள் உள்ளன.

புதிய ஹூண்டாய் வெர்னா EX வேரியண்ட்

புதிய ஹூண்டாய் வெர்னா EX வேரியண்ட்

இந்த வேரியண்ட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த வேரியண்ட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் தேர்வு செய்து கொள்ளலாம். E வேரியண்ட்டைவிட இந்த வேரியண்ட்டில் அதிக வசதிகள் உள்ளன. அதேநேரத்தில், மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட், அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் இல்லை.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் EX வேரியண்ட்டில் 5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்புறத்தில் புரொஜெக்டர் பனி விளக்குகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், பின்புற பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, விபத்தில் சிக்கினால் கதவுகள் தானாக திறந்து கொள்ளும் வசதி, கீ லெஸ் என்ட்ரி வசதி, ரியர் டீஃபாகர், உயரத்தை கூட்டி குறைக்கும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, யுஎஸ்பி சார்ஜர் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் 16 அங்குல ஸ்டீல் வீல்களும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலில் 16 அங்குல அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வெர்னா SX வேரியண்ட்

புதிய ஹூண்டாய் வெர்னா SX வேரியண்ட்

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் எஸ்எக்ஸ் வேரியண்ட்டானது பெட்ரோல் மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதேநேரத்தில், டீசல் மாடலில் எஸ்எக்ஸ் வேரியண்ட்டானது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வளைவுகளில் திரும்பும்போது ஒளி தரும் கார்னரிங் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆகியவை முக்கிய அம்சங்கள். இந்த சாதனமானது, ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும். கியர் லிவர் மற்றும் ஸ்டீயரிங் வீல் போன்றவைக்கு லெதர் கவர் போடப்பட்டு இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா SX(O) வேரியண்ட்

புதிய ஹூண்டாய் வெர்னா SX(O) வேரியண்ட்

அதிக வசதிகளை கொண்ட வேரியண்ட் இதுதான். இந்த வேரியண்ட்டானது டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விலை உயர்ந்த வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஸ்மார்ட் சாவி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, வென்ட்டிலேட்டட் வசதி கொண்ட இருக்கைகள், பவர் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

பெட்ரோல் மாடல் விலை விபரம்

பெட்ரோல் மாடல் விலை விபரம்

வேரியண்ட் விலை
ஹூண்டாய் வெர்னா இ ரூ.7,99,900
ஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் ரூ.9,06,900
ஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் [ஆட்டோ] ரூ.10,22,900
ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் ரூ.9,49,900
ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் (ஓ) ரூ.11,08,900
ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் (ஓ) ஏ.டி ரூ.12,23,900
டீசல் மாடல் விலை விபரம்

டீசல் மாடல் விலை விபரம்

வேரியண்ட் விலை
ஹூண்டாய் வெர்னா இ ரூ.9,19,900
ஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் ரூ.9,99,900
ஹூண்டாய் வெர்னா இஎக்ஸ் [ஆட்டோ] ரூ.11,39,900
ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் ரூ.11,11,900
ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் [ஆட்டோ] ரூ.12,61,900
ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் (ஓ) ரூ.12,39,900
மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Here's a complete variant-wise explanation of the 2017 Hyundai Verna.
Story first published: Wednesday, August 23, 2017, 10:24 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos