2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியது..!! முழுத் தகவல்கள்..!!

Written By:

ஜாகுவார் லேண்ட்ரோவர் (JLR) நிறுவனம் மேம்படுத்தப்பட்டுள்ள தனது புதிய தலைமுறைக்கான லேண்ட்ரோவர் டிஸ்கவரி காரை இந்தியாவில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிடுகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

கார் அண்ட் பைக் இணையதளம், டீலர்கள் ரூ.3 லட்சம் ஆரம்ப விலையில் 2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவை தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

7 இருக்கைகள் கொண்ட முழு அளிவிலான எஸ்.யூ.வி மாடலாக லேண்ட்ரோவர் டிஸ்கவரி தயாராகியுள்ளது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

1989ல் இருந்து இந்த மாடல் கார் 5 மாடல்களாக வெளியாகியுள்ளது. டிஸ்கவரி என்ற மாடலின் கீழ் 3வது தலைமுறை மாடலாக தற்போதைய கார் வெளிவருகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட முழு அளவிலான எஸ்.யூ.வி கார் கட்டமைப்பின் படி இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

அதனால் இந்த புதிய தலைமுறைக்கான டிஸ்கவரி இடவசதி, பயன்பாட்டு வசதி மற்றும் இயக்க வசதிகளில் மேலும் இலகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

அலுமினியம் மோனோகோக் கேஸிஸ் கொண்ட லேண்ட்ரோவர் 2017 டிஸ்கவரி கார் 480 கிலோ கிராம் எடைக்கொண்டது. உறுதி மற்றும் இலகுத்தன்மை ஆகியவை முந்தைய மாடலை விட இதில் கூடுதல் சிறப்புடன் இருக்கும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

முதல் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணி, இரண்டு மற்றும் மூன்று இருகைக்கள் வரை தனது இருக்கையை நீடித்துக்கொள்ளும் வசதி இதில் உள்ளது. இது ஒரு சாதுர்யமான தொழில்நுட்பம் என காரை தயாரித்துள்ள நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

காரின் மத்திய பகுதியில் தொடு உணர்வுடன் கூடிய திரை வசதி மற்றும் அதை கட்டுப்படுத்த ஸ்மார்ட்ஃபோனுடன் கூடிய செயலி என தொழில்நுட்பத்திலும் 2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி கார் அசரடிக்கிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

14 ஸ்பீக்கர்களுடன் கூடிய மெரிடியனின் டிஜிட்டல் சரவுண்ட் சிஸ்டம், நான்கு 2V சார்ஜிங் ஃபோர்டுகள் போன்ற இதர வசதிகளும் இதிலிருந்து ஸ்பெஷல்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேவைகளிலும் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 3 லிட்டர் வி6 திறன் பெற்ற பெட்ரோல் எஞ்சின் 335 பிஎச்பி பவர் மற்றும் 450 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

3-லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மோட்டார் எஞ்சின் 254 பிஎச்பி பவர் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது 2017 லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரின் விலை ரூ.1 கோடி வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

திறன், தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த கார் இந்திய சந்தையில் ஆடி க்யூ7, மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் மற்றும் வால்வோ எக்ஸ்.சி 90 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி காருக்கான முன்பதிவு தொடங்கியது..!!

முன்னர் இருந்த மாடலை விட மிகவும் இலகுவான இயக்கங்கள் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட எஞ்சினுடன் 2017 லேண்ட் ரோவர் வெளிவருகிறது.

இந்த தேவைகளே இந்திய சந்தையில் இதற்கான விற்பனை திறனை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil: Next-Generation Land Rover Discovery India Launch Details Revealed; Bookings Open. Click for Details...
Story first published: Monday, July 31, 2017, 12:26 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark