ஸைலோவுக்கு மாற்றாக வரும் புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Saravana Rajan

ஸைலோவுக்கு மாற்றாக வரும் புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி உள்ளன. அந்த படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

எம்பிவி கார் ரகத்தில் மஹிந்திரா ஸைலோவுக்கு முக்கிய இடம் உண்டு. மிகச்சிறந்த 7 சீட்டர் மாடலாக இருந்தது. இந்த நிலையில், மாருதி எர்டிகா போன்ற காம்பேக்ட் எம்பிவி கார்களின் வருகையால், மஹிந்திரா ஸைலோவுக்கு வரவேற்பு குறைந்தது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

இந்த நிலையில், இதற்கு மாற்றாக புதிய மாடலை களமிறக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது. அதன்படி, புதிய மாடலை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்து, சோதனை ஓட்டங்களை நடத்தி வருகிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள டியூவி300 எஸ்யூவியின் கூடுதல் நீளம் கொண்ட மாடலாக இந்த கார் வடிவமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், அதிக பயணிகள் செல்லும் வகையில், மூன்றாவது இருக்கை அமைப்பையும் பெற்றிருக்கிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

ஸ்பை படங்களில் மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் விலை குறைவான பேஸ் மாடல் என்பது தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் பம்பர், கருப்பு வண்ண கைப்பிடிகள், வீல் கவல் இல்லாமல் இருப்பது போன்றவை பேஸ் மாடலாக கருத முடிகிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

பின்புறத்தில் புதிய டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பதன் மூலமாக டியூவி300 காரிலிருந்து வேறுபடுகிறது. மேலும், மூன்றாவது வரிசை பயணிகள் செல்வதற்கு ஏதுவாக, பின்புறத்தில் உள்ள பம்பருக்கு கீழே படி ஒன்றும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புற கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது.

Trending On DriveSpark Tamil:

Recommended Video

[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

டியூவி300 எஸ்யூவியில் இருப்பதைவிட இந்த புதிய டியூவி300 ப்ளஸ் காரின் குவார்ட்டர் பேனல் பகுதியிலுள்ள கண்ணாடி பெரிதாக மாறி இருக்கிறது. அதேபோன்று, பின்புறத்தில் P4 என்ற வேரியண்ட் பெயர் பதிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

உட்புறத்தில் இரட்டை பழுப்பு- பீஜ் வண்ணத்திலான இரட்டை வண்ண டேஷ்போர்டு அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. க்ரோம் அலங்காரத்துடன் வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகள், கியர் லிவரை ஒட்டி கொடுக்கப்பட்டிருக்கும் பவர் விண்டோஸ் சுவிட்சுகள் முக்கியமானதாக குறிப்பிடப்படலாம்.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 100 பிஎச்பி பவரையும் அளிக்கும் இரண்டு பவர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால், புதிய டியூவி300 ப்ளஸ் எஸ்யூவியில் புதிய 1.99 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் திறன் பெற்றிருக்கும்.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

இந்த புதிய எஸ்யூவி மாடலில் கடைசியில் கொடுக்கப்பட்டு இருக்கும் மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பு பக்கவாட்டில் பெஞ்ச் இருக்கைகளாக இருப்பது ஸ்பை படங்களில் தெரிய வருகிறது. அதாவது, டொயோட்டா குவாலிஸ் போன்ற இருக்கை அமைப்புடன் பக்கத்திற்கு தலா 3 பேர் வரை அமர்வதற்கான வசதியை பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரின் ஸ்பை படங்கள்!

அதேநேரத்தில், முன்னோக்கிய மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பும் விலை அதிகமுடைய வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்பிவி கார் மற்றும் எஸ்யூவி கார்களுக்கு உரிய அம்சங்களை சரியான விகிதத்தில் கலந்து செய்யப்பட்ட கலவையாக இந்த புதிய மாடல் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending On DriveSpark Tamil:

More from DriveSpark

Article Published On: Thursday, November 2, 2017, 14:14 [IST]
English summary
New Mahindra TUV300 Plus Spy Images.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+