புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் மிக சவாலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், புதிய மாருதி டிசையர் காரின் தோற்றத்திற்கு தனித்துவம் தருவதற்கும், கூடுதல் வசதிகளை பெறும் விதத்தில், விசேஷ ஆக்சஸெரீகள் பேக்கேஜை மாருதி அறிமுகம் செய்துள்ளது. அதன் விபரங்களை காணலாம்.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

Grandiose மற்றும் Exuberance என்ற இரண்டு விதமான ஆக்சஸெரீ பேக்கேஜுகளை மாருதி அறிமுகம் செய்துள்ளது. இந்த கூடுதல் ஆகச்ஸெரீகளை டீலர்களில் பொருத்தி தர இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

கிராண்டியோஸ் பேக்கேஜில் க்ரோம் ஃபினிஷுடன் கூடிய டோர் வைசர்கள் மற்றும் பாடி கிளாடிங் எனப்படும் காரின் கதவுகளில் பொருத்துவதற்கான பிளாஸ்டிக் சட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் விசேஷ சீட் கவர் மற்றும் பழுப்பு வண்ண மர அலங்காரத் தகடுகள் மூலமாக காரின் இன்டீரியரை அழகுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இந்த பேக்கேஜில் இருக்கிறது.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

எக்ஸுபெரன்ஸ் பேக்கேஜில் முன்புற பம்பருக்கான ஸ்பாய்லர், சைடு ஸ்கர்ட்டுகள் மற்றும் பின்புற பம்பருக்கான கூடுதல் அலங்கார அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட பாடி கிளாடிங், கருப்பு நிற மிதியடிகள், விசேஷ சீட் கவர் மற்றும் டோர் வைசர்கள் இடம்பெற்று இருக்கின்றன.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

இதுதவிர, விதவிதமான வண்ண நூல் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய சீட் கவர்கள், மிதியடிகளும் தனியாக வாங்கிக் கொள்ள முடியும்.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

அத்துடன், இருக்கையில் பொருத்துவதற்கான எல்சிடி மானிட்டர், ஆடியோ சிஸ்டத்துடன் பொருத்திக் கொள்வதற்கான சப் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிபயர் ஆகியவையும் தனியாக கிடைக்கும்.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

ரியர் வியூ கேமராவுக்கான திரையுடன் கூடிய ரியர் வியூ மிரர், காற்று சுத்திகரிப்பு சாதனம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் சிஸ்டம், டயர்களில் காற்றழுத்தம் குறித்த தகவலை தரும் சாதனம் உள்ளிட்டவையும் புதிய மாருதி டிசையருக்கான கூடுதல் ஆக்சஸெரீகளாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

இந்த விசேஷ ஆக்சஸெரீ பேக்கேஜுகளுக்கான விலை விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ரூ.15,000 முதல் ரூ.25,000 விலையில் இந்த ஆக்சஸெரீ பேக்கேஜுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

தற்போது பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் வந்திருக்கும் புதிய மாருதி டிசையர் காருக்கு இந்த கூடுதல் ஆக்சஸெரீ பேக்கேஜுகள் நிச்சயம் கூடுதல் சிறப்பு சேர்க்கும் என நம்பலாம்.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

மாருதி டிசையர் கார் 82 பிஎச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 பிஎச்பி பவரை அளிக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

புதிய மாருதி டிசையர் காருக்கான விசேஷ ஆக்சஸெரீகள்- முழு விபரம்!

புதிய மாருதி டிசையர் காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.40 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.5.45 லட்சம் முதல் ரூ.9.41 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

English summary
Maruti Suzuki is offering official accessories on the new Dzire sedan. The accessories include exterior and interior updates and can be fitted at any of Maruti dealerships.
Story first published: Saturday, May 20, 2017, 16:05 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark