ஆகஸ்ட்டில் இந்தியாவின் நம்பர்-1 மாடலாக வாகை சூடிய புதிய மாருதி டிசையர் கார்!

கடந்த மாத விற்பனையில் புதிய மாருதி டிசையர் கார் இமாலய இலக்கை தொட்டு இந்தியாவின் நம்பர்-1 மாடலாக வாகை சூடியிருக்கிறது. அதனை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த மாத விற்பனையில் இமாலய இலக்கை பதிவு செய்து அசத்தி இருக்கிறது புதிய மாருதி டிசையர் கார். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

கடந்த மே மாதம் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது. வடிவமைப்பில் முற்றிலும் புதுமையும், வசதிகளில் மேன்மையுடன் வந்த இந்த புதிய மாருதி டிசையர் காருக்கு எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

ஆகஸ்ட்டில் 30,934 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகி அசத்தி இருக்கின்றன. இது ஒரு இமாலய விற்பனை சாதனையாகவே கூற முடியும். ஏனெனில், இதுவரை ஒரே மாதத்தில் 30,000 க்கும் மேல் எண்ணிக்கையில் எந்த காரும் எட்டியதில்லை.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

மேலும், விற்பனையில் நம்பர்-1 மாடலாக இருந்து வரும் மாருதி ஆல்ட்டோ கார் இதுவரை விற்பனையில் புரிந்து வந்த சாதனைகளையும் ஒரே மாதத்தில் அடித்து உடைத்துள்ளது மாருதி டிசையர்.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றதே இந்த இமாலய விற்பனைக்கு காரணம். புதிய மாருதி டிசையர் காரின் டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு முற்றிலும் புதிய காம்பேக்ட் செடான் மாடலாக மாற்றப்பட்டு இருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

முழுமையான செடான் கார் போல இப்போது மாறி இருப்பதும், புதிய டிசைனும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பகல் நேர விளக்குகள், புதிய க்ரில் அமைப்பு, புதிய அலாய் வீல்கள் மற்றும் டெயில் லைட்டுகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், பக்கவாட்டு கூரை அமைப்பிலும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

மாருதி டிசையர் காரின் மிகப்பெரிய குறையாக இருந்த நெருக்கடியான பின் இருக்கை தற்போது அதிக இடவசதியுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இருக்கைகளும் மிக சொகுசாக மாறி இருக்கின்றன.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

இந்த காரில் தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரட்டை வண்ண இன்டீரியர், பின்புற பயணிகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள் என வாடிக்கையாளர்களை கவரும் வசதிகள் ஏராளமாக இருக்கின்றன.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் புதிய டிசையர் கார் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக மாறி இருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

பழைய காரைவிட இந்த புதிய மாருதி டிசையர் காரின் எடை 105 கிலோ வரை குறைந்துள்ளது. இதனால், மைலேஜ் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 22 கிமீ மைலேஜ் தரும் என்றும், டீசல் மாடல் லிட்டருக்கு 28.4 கிமீ மைலேஜ் வரையிலும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், எரிபொருளுக்கு அதிகம் செலவு வைக்காத செடான் கார் மாடலாகவும் இருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

சிறப்பான வடிவமைப்பு, திருப்தியளிக்கும் இடவசதி, அதிக மைலேஜ் என்பதுடன், மாருதி நிறுவனத்தின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் இந்த காருக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. மேலும், போட்டியாளர்களைவிட குறைவான பராமரிப்பு செலவீனமும் இந்த காருக்கான வரவேற்பை எகிடுதகிடாக மாற்றி இருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

புதிய மாருதி டிசையர் காரில் டியூவல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அனைத்து வேரியண்ட்டுகளிலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இந்த செக்மென்ட்டில் பாதுகாப்பு மிக்க கார் மாடல்களில் ஒன்றாகவும் மாறி இருக்கிறது.

 விற்பனையில் கலக்கும் புதிய மாருதி டிசையர் கார்!

பெட்ரோல் மாடல் ரூ.5.45 லட்சம் முதல் ரூ.8.41 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டீசல் மாடல் ரூ.6.45 லட்சம் முதல் ரூ.9.41 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
New Maruti Dzire clocks 30,934 Units In August 2017.
Story first published: Wednesday, September 6, 2017, 20:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X