ஸ்டிக்கர் அலங்காரத்தில் அட்டகாசமாக காட்சி தரும் புதிய மாருதி டிசையர்!

மாருதி டிசையர் காரில் ஸ்டிக்கர் அலங்காரம் மற்றும் இன்டீரியர் அலங்காரம் செய்து அசத்தி உள்ளனர் மும்பையை சேர்ந்த வினைல் கபூர் மற்றும் அவரது குழுவினர். அந்த படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மாருதி டிசையர் காருக்கு ஏராளமான ஆக்சஸெரீகளை மாருதி நிறுவனமே நேரடியாக வழங்குகிறது. இருப்பினும், வெளியில் சில கஸ்டமைஸ் நிறுவனங்கள் மற்றும் வினைல் ஸ்டிக்கர் கடைகளிலும், மாருதி டிசையர் காரின் தோற்றத்தை கூடுதல் வசீகரமாக்கும் முயற்சிகளில் அசத்தி வருகின்றன.

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

அவ்வாறு, மும்பையை சேர்ந்த கஸ்டமைஸ் நிறுவனம் ஒன்று, புதிய மாருதி டிசையர் காரில் அசத்தலான ஸ்டிக்கர் வேலைப்பாடுகளையும், இன்டீரியர் மாற்றங்களையும் செய்துள்ளது. இரண்டு வண்ணக் கலவைகளில் ஸ்டிக்கர் அலங்காரம் செய்யப்பட்ட புதிய மாருதி டிசையர் காரின் படங்கள், தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

வெள்ளை நிற காரில் கூரையில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. ரியர் வியூ மிரர்கள், கண்ணாடி ஜன்னல்கள் ஆகியவையும் கருப்பு நிறத்தில் காட்சி தருகின்றன.

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

தவிர, பானட்டில் நீலம் மற்றும் கருப்பு வண்ணத்தில் அலங்கார வரிக்கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. கூரையிலும், நீலம் மற்றும் வெள்ளை வண்ணக் கோடுகள் மூலமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

முகப்பில் க்ரில் அமைப்பில் இருக்கும் க்ரோம் பீடிங் கருப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதையும் காணலாம். காரின் பக்கவாட்டிலும் கருப்பு மற்றும் நீல வண்ண கோடுகள் மற்றும் புதிய கருப்பு வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

புதிய மாருதி டிசையர் காரின் டாப் வேரியண்ட்டில் டேஷ்போர்டு மிக அலங்காரமாக காட்சி தருகிறது. மர அலங்கார வேலைப்பாடுகள் கண்ணை கவர்கின்றன. புதிய மாருதி டிசையர் காரின் உட்புறத்தில் முழுவதும் லெதர் வேலைப்பாடுகளுடன் மாற்றப்பட்டுள்ளது. காவி மற்றும் கருப்பு வண்ண இன்டீரியர் கலருக்கு மாறி இருக்கிறது.

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

டைமண்ட் கட் தையல்களுடன் கூடிய இருக்கைகள் சொகுசு கார்களை போன்று காட்டுகிறது. டேஷ்போர்டில் புதிய இரட்டை வண்ணக் கலவை மூலமாக அலங்காரம் செய்துள்ளனர்.

Trending On DriveSpark Tamil:

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

மற்றொரு வண்ணக் கலவையும் மிக அசத்தலாக இருக்கிறது. வெள்ளை வண்ணக் காரில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. கூரையில் சிவப்பு வண்ணக் கோடுகள் மூலமாக கவர்ச்சி கூட்டப்பட்டு இருக்கிறது.

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

காரின் பக்கவாட்டில் கருப்பு வண்ண ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், புதிய கருப்பு வண்ண அலாய் வீல்கள், கருப்பு வண்ணத்திலான பம்பர் காப்புகள் போன்றவை சிறப்பு. இந்த காரின் இன்டீரியர் பீஜ் மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் இருக்கிறது.

 ஸ்டிக்கர் அலங்காரத்தில் புதிய மாருதி டிசையர்!

மும்பையை சேர்ந்த வினைல் கபூர் என்ற கஸ்டமைஸ் நிபுணர் மற்றும் அவரது குழுவினரால் இந்த கஸ்டமைஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபாணியில் உங்களது டிசையர் காரிலும் அலங்காரம் செய்து கொள்வதற்கு இந்த படங்கள் உதவி புரியும் என்ற நோக்கில் இங்கே வழங்கி இருக்கிறோம்.

Picture credit: Vinay Kapoor

More from DriveSpark

Article Published On: Thursday, October 19, 2017, 13:17 [IST]
English summary
New Maruti Dzire Gets Custom Wrap Job.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+