மாருதி எஸ் க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என்னென்ன?

Written By:

மாருதி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒருபோதும் பொய்த்து போனதில்லை. ஆனால், நெக்ஸா ஷோரூம் வழியாக முதல் மாடலாக வெளியிடப்பட்ட எஸ் க்ராஸ் கார் மாருதி நிறுவனம் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. குறிப்பாக, ஹூண்டாய் க்ரெட்டா வந்தவுடன், எஸ் க்ராஸ் காரை திரும்பி பார்க்க ஆள் இல்லாமல் போனது.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

விலை நிர்ணயத்தில் மாருதி கோட்டை விட்டதே ஆரம்ப கட்ட தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில், சந்தைப் போட்டி அதிகரித்துள்ள இவ்வேளையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய எஸ் க்ராஸ் மாடலை மாருதி நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

மாருதி எஸ் க்ராஸ் காரின் மிக முக்கிய மாற்றமாக முகப்பு க்ரில் அமைப்பை கூற முடியும். க்ரோம் பட்டைகளுடன் கூடிய புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஹெட்லைட்டிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் கம்பீரத்தை கூட்ட பயன்படுகிறது.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர எல்இடி விளக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. ரியர் வியூ மிரர்கள் வடிவமைப்பு மாற்றம் கண்டிருப்பதுடன், அதனுடன் இணைந்த டர்ன் இண்டிகேட்டர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Recommended Video - Watch Now!
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

பக்கவாட்டில் அதிக மாறுதல்கள் தென்படவில்லை. புதிய டிசைனிலான அலாய் வீல்களை முக்கிய மாற்றமாக கூறலாம். புதிய டெயில் கேட், புதிய எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்று இருக்கின்றன.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

உட்புறத்தில் பல மாறுதல்களை காண முடிகிறது. பல இடங்களில் க்ரோம் அலங்கார பாகங்கள் வசீகரிக்கின்றன. மென்மையான அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய இருக்கைகள், லெதர் உறையுடன் ஆர்ம் ரெஸ்ட்டுகள் ஆகியவை புதிதாக தெரிகின்றன.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

புதிய மாருதி எஸ் க்ராஸ் காரில் ஸ்மார்ட்ப்ளே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். இதுதவிர, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

புதிய மாருதி எஸ் க்ராஸ் காரில் முன்புறம், பக்கவாட்டு பகுதி மோதல்களின்போது சிறந்த பாதுகாப்பை பயணிகளுக்கு வழங்கும் கட்டமைப்புடன் வந்துள்ளது. இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கிறது. மாருதி எஸ் க்ராஸ் காரிலிருந்து 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

மாருதி எஸ் க்ராஸ் காரில் சுஸுகியின் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிக்கிள் என்ற நவீன மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நின்றிருந்தால், எஞ்சின் தானாக அணைந்துவிடும். க்ளட்ச்சை மிதிக்கும்போது எஞ்சின் மீண்டும் உயிர் பெற்று விடும். இதன்மூலமாக, எரிபொருள் சிக்கனம் கூடுதலாக பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

புதுப்பொலிவுடன் மாருதி எஸ் க்ராஸ்... என்னென்ன புதுசு?

முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டபோது, எஸ் க்ராஸ் காருக்கு அதிக விலையை நிர்ணயித்து சூடுபட்டுக் கொண்ட மாருதி நிறுவனம், இப்போது அதனை உணர்ந்து கொண்டு சரியான விலையிலான சிறந்த க்ராஸ்ஓவர் மாடலாக நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.

English summary
Let us read through the changes that you need to know about the new Maruti S-Cross.
Story first published: Friday, September 29, 2017, 9:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark