புதிய மாருதி ஆல்ட்டோ 800 கார் அறிமுகம் எப்போது?
புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ 800 கார் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆரம்ப ரக கார் மார்க்கெட்டில் மாருதி ஜாம்பவானாக விளங்குகிறது. குறிப்பாக, ஆல்ட்டோ கார் அந்த நிறுவனத்துக்கு பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. மாதத்திற்கு சராசரியாக 20,000 கார்களுக்கும் மேல் விற்பனையாகி வருகிறது.

இந்த சூழலில் ரெனோ க்விட் உள்ளிட்ட புதிய மாடல்களால் மாருதி ஆல்ட்டோ காருக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் இருக்கிறது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், புதிய தலைமுறை ஆல்ட்டோ 800 காரை அறிமுகம் செய்ய மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

வடிவமைப்பில் க்ராஸ்ஓவர் ரக மாடலாக புதிய ஆல்ட்டோ 800 கார் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ரெனோ க்விட் காருக்கு நேரடி போட்டியாக இந்த புதிய மாடல் இருக்கும் என்று தெரிகிறது.

ரெனோ க்விட் கார் போன்றே உட்புறத்திலும் பல நவீன தொழில்நுட்ப சாதனங்கள் இடம்பெற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய தலைமுறை வடிவமைப்பு நுட்பத்தில் உருவாக்கப்படுவதால், தற்போதைய மாடலைவிட அதிக உறுதிமிக்க கட்டமைப்பிலும், அதிக பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கும். ஏர்பேக் , ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்கள் அடிப்படையாக இருக்கும் என்றும் தெரிகிறது.

இதுவரை ஆல்ட்டோ 800 கார் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், புதிய மாடல் 800சிசி டீசல் எஞ்சின் மாடலிலும் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டீசல் மாடல் மிகச் சிறப்பான மைலேஜை அளிக்கும் என்பதால் வாடிக்கையாளர்களிடத்தில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஆல்ட்டோ 800 கார் இடவசதியிலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கும். எனவே, வாடிக்கையாளர்களின் மிகச் சிறப்பான தேர்வு என்ற பிம்பத்தை தொடர்ந்து தக்க வைக்க அதிக வாய்ப்புகள் எழுந்துள்ளன.

அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்த புதிய தலைமுறை மாருதி ஆல்ட்டோ 800 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலமாக, தனது விற்பனையை ஆல்ட்டோ 800 கார் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் என நம்பலாம்.
புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!
புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications







