முதல்முறையாக முக்காடு போடாமல் தரிசனம் கொடுத்த புதிய மாருதி டிசையர்!

Written By:

புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக புதிய மாருதி டிசையர் கார் தரிசனம் கொடுத்துள்ளது. அந்த படங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய மாருதி டிசையர் ஸ்பை படங்கள்!

புதிய தலைமுறை மாருதி டிசையர் காரின் முகப்பு முற்றிலும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, பானட், ஹெட்லைட், பனி விளக்குகள், பம்பர் என அனைத்துமே மாறி இருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெற்றிருக்கிறது.

 புதிய மாருதி டிசையர் ஸ்பை படங்கள்!

பக்கவாட்டில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதே நேரத்தில், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். முகப்பை போன்று பின்புறத்திலும் அதிக மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. டெயில் லைட்டுகள் டிசைனும், பம்பர் டிசைனும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

 புதிய மாருதி டிசையர் ஸ்பை படங்கள்!

இன்டீரியரில் அதிக மாறுதல்கள் நிகழ்ந்திருக்கிறது. புதிய டேஷ்போர்டு அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. புதிய டிசைனிலான ஏசி வென்ட்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சாசனம் இடம்பெற்றிருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் டயல்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

 புதிய மாருதி டிசையர் ஸ்பை படங்கள்!

புதிய தலைமுறை மாருதி டிசையர் காரில் மர தகடுகள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல் இடம்பெற்று இருக்கிறது. இரட்டை வண்ண இன்டீரியர் கவர்ச்சியாக இருக்கிறது.

 புதிய மாருதி டிசையர் ஸ்பை படங்கள்!

புதிய மாருதி டிசையர் காரின் எஞ்சின் ஆப்ஷன்களில் மாறுதல் இல்லை. ஏற்கனவே பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெறும் என்று தெரிகிறது. அதேபோன்று, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்.

 புதிய மாருதி டிசையர் ஸ்பை படங்கள்!

புதிய மாருதி டிசையர் கார் ரூ.50,000 முதல் ரூ.70,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Read in Tamil: The new Maruti Suzuki Swift Dzire (2017 model) spied in the open. The car has undergone major design changes.
Story first published: Wednesday, April 5, 2017, 11:50 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos