ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

டேஸியா பிராண்டில் விற்பனையாகி வரும் டஸ்ட்டர் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெனோ பிராண்டில் வர இருக்கும் இந்த புதிய டஸ்ட்டரின் படங்கள், தகவல்களை இந்த செய்தியில் க

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

ரெனோ நிறுவனத்தின் துணை நிறுவனமான டேஸியா பிராண்டில் விற்பனை செய்யப்படும் டஸ்ட்டர் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் செப்டம்பரில் நடைபெற இருக்கும் பிராஃங்க்பரட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவியின் படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

இதே ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வருவதால், புதிய டேஸியா டஸ்ட்டர் எஸ்யூவியின் நீள, அகலம், உயரத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

வலிமையான முகப்பு க்ரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அகலமான ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அலுமினிய ரூஃப் ரெயில்களும் வசீகரிக்கின்றன.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

வின்ட்ஸ்கிரீன் மற்றும் பின்புற கதவு அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, உட்புறத்தில் இடவசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. பானட் மற்றும் பெல்ட் லைன்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், தோற்றம் கூடுதல் பிரம்மாண்டத்தை பெற்றிருக்கிறது. முன்புறத்திலும், பின்புறத்திலும் கீறல் விழாத தன்மையுடன் ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

புதிய டேஸியா டஸ்ட்டரின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. வெளிநாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும். இந்தியாவில் ரெனோ பிராண்டில் வரும்போது, தற்போது இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வரும்.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

பக்கவாட்டு பேனல்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், வீல் ஆர்ச்சுகளில் அதிக மாற்றங்கள் இல்லை. பானட்டில் செய்யப்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக பக்கவாட்டிலும் மிரட்டலாக இருக்கிறது.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியின் இன்டீரியர் படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வரும் என்பது எதிர்பார்ப்பு.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!

அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரெனோ நிறுவனத்தின் தாயகமான பிரான்ஸ் நாட்டிலும், தொடர்ந்து இங்கிலாந்திலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு செல்லும். இதைத்தொடர்ந்து, புதிய டஸ்ட்டர் எஸ்யூவி அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 30, 2017, 15:42 [IST]
English summary
Renault (Dacia) has revealed the all-new facelifted Duster ahead of its debut at the 2017 Frankfurt Motor Show in September.
மேலும்... #ரெனால்ட் #renault
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+