மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

Written By:

மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. படங்கள் மற்றும் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

நம் நாட்டில் விற்பனையாகும் மாருதி சியாஸ் கார் சீனாவில் சுஸுகி அலிவியோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், சுஸுகி அலிவியோ கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

இந்த புதிய மாடல் தற்போது சீனாவில் நடந்து வரும் செங்குடு ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சுஸுகி அலிவியோ கார் தற்போது அங்கு அலிவியோ புரோ என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறது.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

முன்புறத்தில் மிக பிரம்மாண்டமான கருப்பு க்ரில் அமைப்பு கொடுக்கப்ப்டடு இருக்கிறது. இது மிக முக்கிய மாற்றமாக கூறலாம். ஹெட்லைட்டுகளில் பெரிய மாற்றங்கள் இல்லை. பம்பர், பனி விளக்குகள் அறை போன்றவை க்ரில் அமைப்பு காரணமாக மாற்றங்களை சந்தித்துள்ளன.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

சுஸுகி அலிவியோ புரோ காரின் பின்புறத்தில் பிஎம்டபிள்யூ கார்களின் டெயில் லைட் சாயலில் இருக்கும் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது காரின் தோற்றத்திற்கு பிரம்மாண்டத்தை தருகிறது. பம்பரும் மாற்றம் கண்டுள்ளது.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

சுஸுகி அலிவியோ புரோ காரில் தற்போது பெரிய அளவிலான தொடுதிரை வசதியுடன் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கிறது. புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கீ லெஸ் என்ட்ரி ஆகிய வசதிகள் உள்ளன.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

புதிய சுஸுகி அலிவியோ புரோ காரில் 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

புதிய சுஸுகி அலிவியோ புரோ காரில் இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

புதிய சுஸுகி அலிவியோ புரோ காரின் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் அப்படியே இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய மாருதி சியாஸ் காரில் இடம்பெறாது. அதேநேரத்தில், அலிவியோ புரோ காரில் இருந்து சில டிசைன் தாத்பரியங்கள் மற்றும் வசதிகள் மாருதி சியாஸ் காரிலும் பயன்படுத்தப்படும்.

 மாருதி சியாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீனாவில் அறிமுகம்!

புதுப்பொலிவுடன் வரும் மாருதி சியாஸ் கார் ஏற்கனவே இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கார் அறிமுகமாகும்போது, ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களுடன் போட்டி போடும்.

Via: bitauto

English summary
Japanese automaker Suzuki has revealed the 2017 Alivio Pro (Ciaz facelift) at the ongoing Chengdu Motor Show in China.
Story first published: Saturday, August 26, 2017, 14:51 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos