புதிய டாடா டிகோர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம்!

Written By:

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டாடா டிகோர் கார் ஜெனிவாவில் துவங்கியிருக்கும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை, டாடா கைட்-5 என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக பார்த்து வந்த நிலையில், முதல்முறையாக தயாரிப்பு நிலை மாடலாக பார்வைக்கு வந்துள்ளது டாடா டிகோர் கார். படங்கள், தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 டிசைன்

டிசைன்

டாடா டிகோர் ஜெனிவா எடிசன் என்ற பெயரில் இந்த கார் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டாடா டியாகோ கார் போன்ற முகப்பு க்ரில் அமைப்பு, நடுவில் டாடா மோட்டார்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

புதிய டாடா டிகோர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம்!

பக்கவாட்டில் டைமன்ட் கட் அலாய் வீல்கள், வலுவான ஷோல்டர் லைன் போன்றவை காரின் கவர்ச்சிக்கு வலு சேர்க்கின்றன. பின்புற கூரை பூட்ரூமுடன் இணைக்கப்பட்டு கூபே ரக கார் போன்று இருக்கிறது. எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் புதிய டாடா டிகோர் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வரும்.

வடிவம்

வடிவம்

டாடா டியாகோ காரின் செடான் மாடலாக வருவதால், இன்டீரியரில் அதிக மாற்றங்கள் இருக்காது. அதேநேரத்தில், இடவசதி டிகோர் கார் சிறப்பாக மேம்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

புதிய டாடா டிகோர் கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம்!

புதிய டாடா டிகோர் கார் 3,992 மிமீ நீளமும், 1,677மிமீ அகலமும், 1,537 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,450மிமீ என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்தியாவில் ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா டிகோர் கார் எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட குறைவான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

புதிய டாடா டியாகோ காரின் படங்கள்!

புதிய டாடா டியோகா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Read in Tamil: New Tata Tigor unveiled at Geneva Motor Show ahead of India launch.
Story first published: Tuesday, March 7, 2017, 15:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark