உலகதரத்திலான நெக்ஸா சர்வீஸ் மையம்; டெல்லியில் அமைத்த சுசுகி நிறுவனம்

Written By:

மாருதி சுசுகி நிறுவனத்தின் நெக்ஸா கார்களுக்கான சர்விஸ் மையம் இந்தியாவில் தலைநகர் டெல்லியில் திறக்கப்பட்டுள்ளது.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

இதை தொடர்ந்து இந்தியாவில் மேலும் 30 இடங்களில் சுசுகி, நெக்ஸா சர்வீஸ் மையங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

ஷோரூம் போன்ற அனுபவத்தை தரும் விதமாக நெக்ஸாவின் இந்த சர்வீஸ் மையத்தை சுசுகி நிறுவியுள்ளது. இதே போன்ற கட்டமைப்புடன் தான் இனி வரும் நெக்ஸா சர்வீஸ் மையங்கள் இயங்கும் என்று தெரிகிறது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

கார்கள் சர்வீஸ் செய்யப்படும் போது அதை வாடிக்கையாளர்கள் பார்க்கக்கூடிய வசதியும் கூடுதலாக இந்த சர்வீஸ் மையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

அங்கு வழங்கப்படும் சர்வீஸ்களை குறித்தும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துக்கொள்ள பிளாஸ்மா டிவியில் அதற்கான காட்சிகள் தொடர்ந்து ஒளிப்பரப்படும்.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

வேலையின் காரணமாக தங்களது வாகனங்களுடன் வாடிக்கையாளர்கள் இருக்க முடியவில்லை என்றால், அதற்கான ஒரு பிரத்யேக வசதியை சுசுகி உருவாக்கியுள்ளது.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

'மை நெக்ஸா' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு வாடிக்கையாளர் அங்கிருந்து செல்லலாம். பிறகு இந்த செயலியின் வாயிலாக கார் சர்வீஸ் செய்யப்படுவதை நேரலையிலே வாடிக்கையாளர் பார்க்கலாம்.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

இந்தியாவில் இயங்கும் சாதாரண சர்வீஸ் மையம் போல இல்லாமல். நெக்ஸாவின் இது உலகத்தரம் மிக்க உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

டெல்லியில் அறிமுகமான பின் இந்த சர்வீஸ் மையங்கள் பல நகரங்களிலும் அமைக்கப்படும். அதற்கு பிறகு இந்தியாவில் சர்வீஸ் மையங்களுக்கான திட்டப்பணிகள் மாற்றியமைக்கப்படும்.

புதிய நெக்ஸா சர்வீஸ் மையம் டெல்லியில் திறக்கப்பட்டது

முன்பதிவு செய்து காரை வாடிக்கையாளர்கள் இங்கு விட்டுச்செல்லலாம். பிறகு சர்வீஸ் முடிந்து நீங்கள் காரை எடுக்க வரும் போது அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தொகையை அதிகாரிகள் விளக்குவார்கள்.

டெல்லிக்கு பிறகு இதேபோன்று பல நெக்சா சர்வீஸ் மையங்களை 2020ம் ஆண்டிற்குள் அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: Maruthi Suzuki Nexa Brand Service Centre Launched in Delhi, India. Click for Details...
Story first published: Sunday, July 30, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark