2017 வெர்னா காரை வெளியிட தயாராகும் ஹூண்டாய்: எஞ்சின், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழுத் தகவல்கள்..!!

2017 வெர்னா காரை வெளியிட தயாராகும் ஹூண்டாய்: எஞ்சின், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழுத் தகவல்கள்..!!

By Azhagar

2017 ஹூண்டாய் வெர்னா காருக்கான டீசர் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த புதிய மாடல் காருக்கான முன்பதிவு வரும் 21ம் தேதி தொடங்குகிறது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

இந்தியாவில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கார் 2017 ஹூண்டாய் வெர்னா. கே 2 பிளாட்ஃபார்மில் வெளிவரும் இந்த காரில் குறிப்பிடவேண்டிய பல சிறப்பம்சங்கள் உள்ளது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

21ம் தேதி முன்பதிவு தொடங்கவுள்ளதால் ஹூண்டாய் நிறுவனம் 2017 வெர்னா காரை ஆக்ஸ்ட்டு 22ம் தேதி வெளியிடுகிறது.

5வது தலைமுறையாக வெளிவரும் வெர்னா காரில் செயல்திறன் மற்றும் வடிவமைப்புகள் முன்பை விட கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளன.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

இந்த புதிய தலைமுறைக்கான காரில் சேஸிஸ் முந்தைய மாடல்களை விட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காரின் சஸ்பென்ஷன் நிலையான பயணம் மற்றும் கட்டுபாட்டை வழங்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

கார் முனை பகுதிகளில் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளை கட்டுபடுத்தும் விதத்தில் காரின் முன்பக்க சஸ்பென்ஷன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல தேவைக்கு ஏற்றவாறான பயணத்தை வழங்கும் விதத்தில் பின் பக்க சஸ்பென்ஷனின் செயல்பாடுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Recommended Video

2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

மிகவும் உறுதியான பிடிமானங்களோடு புதிய வெர்னா கார் உருவாக்கப்பட்டுள்ளதால், NVH என்று சொல்லப்படும் சத்தம், அதிர்வு, கடுமை போன்றவை இருக்காது என ஹூண்டாய் உறுதியளிக்கிறது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சின் தேர்வு முறைகளில் 5வது தலைமுறைக்கான ஹூண்டாய் வெர்னா வெளிவருவதாக உள்ளது.

பெட்ரோல் எஞ்சின் அதிகப்பட்சமாக 121.3 பிஎச்பி பவர் மற்றும் டீசல் எஞ்சின் 126.2 பிஎச்பி பவர் வழங்கும் திறன் பெற்று இருக்கும்.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

தேர்வுகளுக்கு ஏற்றவாறு காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடட் கியர்பாக்ஸ் காரின் எஞ்சினோடு கூட்டணி அமைத்துள்ளது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

காரின் செயல்பாடு மற்றும் கியர்பாக்ஸின் செய்முறைகளால் எரிவாயு சிக்கனம் ஏற்படும் என்றும், உயர்ந்த குறைந்த மற்றும் அதிவேக செயல்திறன் வழங்கும் எனவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

காரின் வெளிப்புற கட்டமைப்பில் அறுங்கோண வடிவமாக (hexagonal) முன்பக்க க்ரில் இருக்கும். எந்நேரமும் எரியக்கூடிய எல்.இ.டி விளக்குகள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் 16 அங்குல அலாய் சக்கரங்கள் உள்ளன.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

அதேபோல காரின் உள்கட்டமைப்புகள் பற்றி பெரிய தகவல்களை தற்போது வரை வெளிவரவில்லை. எனினும் தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெய்மெண்ட் சிஸ்டம் 7-இஞ்ச் அளவுடன் இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

ஆக்ஸ்டு 21ம் தேதி தொடங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா காருக்கான முன்பதிவு அனைத்து நாடுகளிலும் ஒருசேர அளவில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

டிரைவ்ஸ்பார்க் இணையதளத்திற்கு கிடைத்த தகவலின்படி, 2017 ஹூண்டாய் வெர்னா காரின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் அதிரடியாக களமிறங்கும் 2017 ஹூண்டாய் வெர்னா!

இதனுடைய டாப் வேரியண்ட் மாடலுக்கு ரூ.13 லட்சம் வரை விலை நிர்ணயமாகலாம். மேலும் நடுத்தர மாடல் ரூ.10 லட்சம் வரை விலை பெறலாம் என தெரிகிறது

Most Read Articles
English summary
Read in Tamil: Hyundai has revealed the next-generation Verna in India. The new sedan will be launched on August 22, 2017. Click for Details...
Story first published: Saturday, August 5, 2017, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X