2018ம் ஆண்டிற்கான சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

2018ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றிருக்கிறது புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

2018ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த கார் விருதை புதிய ஹூண்டாய் வெர்னா கார் வென்றிருக்கிறது. இதுகுறித்து விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

2006ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கார் மற்றும் பைக்குகளில் சிறந்த மாடலை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவின் தலைசிறந்த ஆட்டோமொபைல் பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் மற்றும் வாகனத் துறை பத்திரிக்கையாளர்கள் அடங்கிய நடுவர் குழு இந்த விருதுகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

Recommended Video

The Emflux Motors Model 1 – India’s First Electric Motorcycle
இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

இதனால், இந்த விருதுகள் வாகன தயாரிப்பு நிறுவனங்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் மிகவும் மதிப்புமிக்கதாக இருந்து வருகிறது. அதன்படி, 2018ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கார் மற்றும் பைக் மாடல் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

2018ம் ஆண்டிற்கான சிறந்த காருக்கான விருதுக்கு புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா, புதிய மாருதி டிசையர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய மூன்று கார்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றன. இதில், வெர்னா மற்றும் டிசையருக்கு இடையிலான கடும் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் புதிய ஹூண்டாய் வெர்னா விருதை தட்டிச் சென்றது.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

டிசைன், எஞ்சின் செயல்திறன், எரிபொருள் சிக்கனம் மற்றும் வசதிகள் என அனைத்து அம்சங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு நடுவர்கள் புள்ளிகளை அளித்தனர். அதில், புதிய ஹூண்டாய் வெர்னா கார் சிறந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

புதிய ஹூண்டாய் வெர்னா 118 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும், புதிய மாருதி டிசையர் கார் 117 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும், ஜீப் காம்பஸ் எஸ்யூவி 87 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், 2018ம் ஆண்டின் சிறந்த காருக்கான விருதை நடுவர் குழு சார்பாக ஜேகே.டயர் நிறுவனத்தின் நிர்வாக இக்குனர் ரகுபதி சிங்கானியாவிடமிருந்து ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஒய்.கே.கூ பெற்றுக் கொண்டார்.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இதுவரை 5 முறை சிறந்த காருக்கான விருதை பெற்றிருக்கிறது. 2008ல் ஐ10 காருக்கும், 2014ல் க்ராண்ட் ஐ10 காருக்கும், 2015ம் ஆண்டு எலைட் ஐ20 காருக்கும், 2016ம் ஆண்டு க்ரெட்டா எஸ்யூவிக்கும், 2018ம் ஆண்டு வெர்னா காருக்கும் சிறந்த கார் விருதை வாங்கி இருக்கிறது.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் உள்ளிட்ட பல கார் மாடல்களின் கடும் சந்தைப் போட்டி மிகுந்த மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் களமிறக்கப்பட்ட ஹூண்டாய் வெர்னா கார் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. விற்பனையிலும் முதல் இடத்தை பிடித்தது.

இந்தியாவின் சிறந்த கார் விருதை வென்றது புதிய ஹூண்டாய் வெர்னா!

இந்த நிலையில், 2018ம் ஆண்டிற்கான சிறந்த கார் விருதை பெற்றிருப்பது, அந்த காரின் வர்த்தகம் வலு பெறுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஹூண்டாய் வெர்னா காரின் டிசைன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் மற்றும் பிரிமியம் வசதிகள் இந்த காருக்கு நல்ல விற்பனையை நல்கி வருகிறது.

Most Read Articles
English summary
Hyundai Motor India Ltd. (HMIL), the country's second largest car manufacturer has won the prestigious Indian Car of the Year 2018 (ICOTY) award for the next-gen Verna.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X