அசரடிக்கும் தோற்றத்தில் டெட்ராய்டு கண்காட்சியில் வெளியான ஜீப் செரோக்கி எஸ்யூவி கார்..!!
அசரடிக்கும் தோற்றத்தில் டெட்ராய்டு கண்காட்சியில் வெளியான ஜீப் செரோக்கி எஸ்யூவி கார்..!!
அமெரிக்காவின் ஃபியட் கிராஸ்லார் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ஜீப் காம்பஸ் எஸ்யூவி காருக்கு பிறகு செரோக்கி எஸ்யூவி என்ற காரை அறிமுகம் செய்துள்ளது.

2018 அமெரிக்கா டெட்ராய்டு ஆட்டோ கண்காட்சியில் ஃபியட் கிராஸ்லா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், புதிய ஜீப் செரோக்கி எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே இந்த கார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜீப் செரோக்கி கார் வெளிவந்திருப்பது ஆட்டோமொபைல் ஆர்வலர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் செரோக்கி காரை விட இந்த புதிய மாடல் ப்ரீமியம் தர வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங்கில் என பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில், 2018 செரோக்கி கார், செரோக்கி கிரான்ட் மற்றும் புதிய ஜீப் காம்பஸ் மாடல்களுக்கு இடையே அமைந்துள்ளது.
Recommended Video


தோற்றம் மற்றும் ஸ்டலைலிங் அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், புதிய செரோக்கி காரின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்கள் இல்லை.

கவர்ந்திழுக்கும் முகப்பு விளக்குகள், மின்-திறனில் இயங்கும் பகலில் எரியும் எல்.இ.டி விளக்குகள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகியவை ஜீப் செரோக்கி காரில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய செரோக்கி காரின் முன்பகுதியில், ஏழு ஸ்லாட் கொண்ட கிரில் அமைப்பு க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. காரின் பம்பர் புதிய வடிமைப்பை கொண்டிருப்பதோடு,

ஸ்போர்ட் திறனுக்கு ஏற்றவாறான தோற்றத்தை பெற வெளிப்புறத்தில் கோடுகள் உள்ளன. மேலும் காரின் ஏர் டேம் கிரில்லுடன் இணைந்து கொள்வதோடு பார்க்க அது பெரியதாகவும் உள்ளது.

2018 செரோக்கி காரின் பின்பகுதியில், மாற்றியமைக்கப்பட்ட டெயில் லேம்ப் கிளஸ்டர், டிஃப்யூசர், டூயல் கிரோம், எக்ஸாஸ்ட் மற்றும் ரூஃப் மவுண்டு, ஸ்பாய்லர் போன்ற தேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் காருக்கான உட்புற அமைப்புகளை பார்க்கும் போது, ஜீப் காம்பஸ் காரின் இன்டீரியர் வடிவமைப்பையே இதுவும் பெற்றுள்ளது.
இருந்தாலும் செரோக்கி காரின் டேஷ் போர்டு, ஏர் வென்ட், மேம்படுத்தப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீல்களில் புதிய மாற்றங்கள் உள்ளன.

புதிய செரோக்கி எஸ்யூவி கார் 2.0 லிட்டர் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் எஞ்சின் என இருவேறு தேவைகளிலும் தயாரிக்கப்படுகிறது.

இதற்கான செயல்திறன் அம்சங்கள் இன்னும் வெளிவராத நிலையில், செரோக்கி மாடலில் பெரிய அலாய் சக்கரங்கள், கீழ் பகுதியில் கருப்பு நிறத்திலான கிளாடிங்,

பெரிய அளவில் ரூஃப் ரெயில்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றிருப்பதால் ப்ரீமியம் தர எஸ்யூவி கார்களில் செரோக்கி காரின் அம்சங்கள் அசரடிக்கின்றன.


Click it and Unblock the Notifications








