முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார். ஸ்பை படங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

வடிவமைப்பிலும், வசகிகளிலும் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கும் மாருதி ஸ்விஃப்ட் காரின் வருகையை வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அடுத்த ஆண்டுதான் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவலால் வாடிக்கையாளர்கள் சற்றே ஏமாற்றத்துடன் உள்ளனர்.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

இந்த நிலையில், புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது. இது ஸ்விஃப்ட் பிரியர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும், ஸ்விஃப்ட் காரின் ஹைப்ரிட் மாடல் முதல்முறையாக இந்திய மண்ணில் வந்திறங்கி இருப்பதும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

கடந்த மார்ச்சில் நடந்த 2017 ஜெனிவா மோட்டார் ஷோ மூலமாக சர்வதேச அளவில் சுஸுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் மாருதி சுஸுகி பிராண்டில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

ஸ்விஃப்ட் காரின் துள்ளலான அந்த வடிவமைப்பை தக்க வைக்கும் விதத்தில், மிகுந்த எச்சரிக்கையுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பலேனோ காரின் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பிளாட்ஃபார்மின் மூலமாக இலகு எடையுடன், மேலும் சிறந்த கையாளுமை கொண்ட காராக இருக்கும்.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

புதிய ஹெட்லைட், அறுகோண வடிவ க்ரில் அமைப்பு, புதிய பம்பர் ஆகியவை முகப்பின் முத்தாய்ப்பான மாற்றங்கள். பக்கவாட்டில் ஏ மற்றும் பில்லர்கள் வழக்கம்போல் பின்னோக்கி சரியும் கூரை அமைப்புடன் வந்துள்ளது.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

பின்புறத்தில் டெயில் லைட்டுகள், பம்பர் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய மாடலைவிட புதிய மாடல் பார்ப்பதற்கு நவீன யுகத்திற்கு ஏற்ற ஸ்விஃப்ட் மாடலாக மாற்றப்பட்டுள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 போல சி பில்லரில் கருப்பு வண்ணம் மூலமாக பின்புற விண்ட் ஷீல்டும், ஜன்னல் கண்ணாடிகளுக்கும் இணைப்பு இருப்பது போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரிலும் தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். எடை குறைக்கப்பட்டிருப்பதால், முன்பைவிட செயல்திறன் மிகச் சிறப்பாக மேம்பட்டிருக்கும்.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

புதிய மாருதி டிசையர் கார் போன்றே, புதிய மாருதி ஸ்விஃப்ட் காரும், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். உட்புறத்தில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிக முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ சாஃப்ட்வேர்களை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். அடிப்பாகம் தட்டையான ஸ்டீயரிங் வீல், ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி போன்றவை மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.

முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்!

அடுத்த ஆண்டு நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Spy Images Source: Cartoq

Most Read Articles
English summary
Now, CarToq has spotted the new Maruti Swift Hybrid in India for the very first time. The Swift is one of the most popular hatchbacks in the country, and it is all set to receive a deserved makeover.
Story first published: Friday, September 8, 2017, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X